அகல் விளக்கு- 12

     விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத் தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.

அகல் விளக்கு- 11

   “மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்.”

அகல் விளக்கு- 10

ஒத்திகையின் போது, சந்திரன் நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது. ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன்.... மு.வ.வின் அகல் விளக்கு, பத்தாம் அத்தியாயம்...

அகல் விளக்கு- 9

அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன்.... மு.வ.வின் அகல் விளக்கு- 9ஆம் அத்தியாயம்...

அகல் விளக்கு- 8

கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து,  “இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே” என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். மு.வ.வின் அகல்விளக்கு- 8ஆம் அத்தியாயம்....

அகல் விளக்கு- 7

மகாகவி பாரதி தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ’பிள்ளைக்காதல்’ குறித்துப் பாடுகிறார். அதேபோல, இப்புதினத்தில் வேலு - கற்பகம் என்ற இரு மழலை உள்ளங்களை நமக்கு அழகாகக் காட்சிப்படுத்துகிறார் மு.வ...

அகல் விளக்கு- 6

கிராமத்து மக்களின் கபடமற்ற வெள்ளை உள்ளத்தை இந்த அத்தியாயத்தில் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் மு.வ. அது மட்டுமல்ல, சந்திரனுக்குள் இருக்கும் சிறு களங்கத்தையும் லேசாக சுட்டிக்காட்டுகிறார். அவன் தானே இக்கதையில் திசை மாறும் நாயகன்?

அகல் விளக்கு- 5

ஊர்த் திருவிழாவை மு.வ. வர்ணிக்கும் பாங்கு எத்துணை இனியது! நவநாகரிகத்தில் நாம் எத்தனை எத்தனை இனியவற்றைத் தொலைத்திருக்கிறோம்? அகல் விளக்கு- பகுதி- 5...

அகல் விளக்கு- 4

இந்த அத்தியாயத்தில் சிறுவன் வேலுவின் வளர்ச்சியை இனிய சொற்களில், மனோவியல் ரீதியில் வர்ணிக்கிறார் மு.வ. அகல் விளக்கின் நான்காம் அத்தியாயம்....

அகல் விளக்கு- 3

படிக்க வந்த வாலாசா நகரில், வேலுவுடன் நண்பனாகிறான் சந்திரன்.... எளிய எழுத்து நடை, இனிய சொற்கள்.... மு.வ.வின் அகல் விளக்கு - மூன்றாம் அத்தியாயம்...

அகல் விளக்கு- 2

கிராமத்திலிருந்து படிப்புக்காக நகருக்குச் செல்கிறான், பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்த சிறுவன் சந்திரன்.... மு.வ.வின் அகல் விளக்கு- இரண்டாம் அத்தியாயம்...

அகல் விளக்கு- 1

மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட பேராசிரியர் மு.வரதராசன் (1912 ஏப். 25  - 1974 அக். 10)  புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். இனிய தமிழ் நடையும் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஆற்றலும் கொண்டவை இவரது படைப்புகள். சாஹித்ய அகாதெமி (1961) விருது பெற்ற, இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ புதினம் நமது தள வாசகர்களுக்காக இங்கே... இது அகல் விளக்கின் சுடர்-1....

அகல் விளக்கு – அறிமுகம்

மு.வரதராசன் (1912 ஏப். 25 - 1974 அக். 10) புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இனிய தமிழ் நடையும் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் ஆற்றலும் கொண்டவை இவரது படைப்புகள். நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை எழுதியவர். இவர் எழுதிய ‘அகல் விளக்கு’ புதினம், சாஹித்ய அகாதெமி (1961) விருது பெற்றதாகும். இப்புதினம் நமது தள வாசகர்களுக்காக இங்கே தொடராக இடம்பெறுகிறது…