எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத் தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.
Author: vamumurali
நந்தனார் சரிதம் – 5
அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை! உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!
நந்தனார் சரிதம் – 4
“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”
நந்தனார் சரிதம் – 3
“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”
நந்தனார் சரிதம் – 2
“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.” “ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”
நந்தனார் சரிதம் – 1
திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…
நாடகக் கலை – காணிக்கை
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...
நாடகக் கலை – அணிந்துரையும் முன்னுரையும்
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...
அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
நிர்வாக மேலாண்மைத் திறனும் செயலின்மையும்…
பகவத் கீதை - நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...
ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்
ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 7
மற்ற புலவர்களோடு பழகியபோது அவரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வியுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள் வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாராமல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர்களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 6
‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது. “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ! ..’
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 5
“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரிகளிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 4
சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.