சீர் என்ற சொல்லுக்கு பல பொருள் இருக்குமாயின், இவ்விடத்தில் ‘சீர்’ என்றால் ஒழுங்கு. எந்த ஒரு செயலையும் நேர்மையாவும், நேர்த்தியாகவும், வழக்கமாகவும், அனைவருக்கும் புரியும் படியாகவும், அதையே மற்றவர்கள் அதன் சிறப்புக் கருதி தன்னிச்சையாக பின்பற்றும்படியாவும் செய்வதற்கு சீர் என்று பெயர். ...