-ஸ்ரீநிவாச பெருமாள்
மகாகவி பாரதியை சிறுமதியாளர்கள் சிலர் அவமரியாதையாகப் பேசியது கண்டு பொங்க்கிய கவிஞர் ஒருவரின் வெடிப்பு இக்கவிதை. அந்தச் சிறுமதியாளர்களின் மதியைக் குலைத்த ஒருவரைச் சாடுகிறது இக்கவிதை...

அன்பின் ஊற்று அன்னை
அருவருப்பின் ஊற்று ‘தந்தை’
ஆறுதலின் ஊற்று அன்னை
ஆணவத்தின் ஊற்று ‘தந்தை’
இனிமையின் ஊற்று அன்னை
இழிவின் ஊற்று ‘தந்தை’
ஈகையின் ஊற்று அன்னை
ஈகையின் ஊற்று ‘தந்தை’
உண்மையின் ஊற்று அன்னை
உளறலின் ஊற்று ‘தந்தை’
ஊட்டி வளர்ப்பவள் அன்னை
ஊதாரியாய் வளர்ந்தவன் ‘தந்தை’
எழில் முகத்தினள் அன்னை
எரிச்சல் முகத்தினன் ‘தந்தை’
ஏணியாய் இருப்பவள் அன்னை
ஏன் நீ என எண்ண வைப்பவன் ‘தந்தை’
ஐயம் அற்றவள் அன்னை
ஐயத்தால் நிறைந்தவன் ‘தந்தை’
ஒழுங்கின் உதாரணம் அன்னை
ஒழுங்கின்மையின் உதாரணம் ‘தந்தை’
ஓதல் நிறைந்தவள் அன்னை
ஓதாமல் தளும்பியவன் ‘தந்தை’
ஒளடதமாய் இருப்பவள் அன்னை
ஒளவியம் நிறைந்தவன் ‘தந்தை’
அன்னை – அவள் நம் தமிழ் அன்னை
‘தந்தை’ – அவன்தான் திராவிடத் ‘தந்தை’
அன்னையைப் போற்றுவோம்! நம்
தமிழன்னையைப் போற்றுவோம்!
குறிப்பு:
‘தந்தை’-யே இப்படி எனில் அதன்
அடிபொடிகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?
$$$