பாரதி திருவாசகம்

மகாகவி பாரதியின் பல கவிதை வாசகங்கள், அத்தகைய திருவாசகங்களே. தற்காலத்து சினிமா ஹீரோக்கள் சொல்லும் பஞ்ச் டயலாக் போல, நெத்தியடியாக, ஆழம் நிறைந்த ஒரு வரி, இரண்டு வரி சொற்றொடர்களை மகாகவி பாரதியார் மழைபோலப் பொழிந்துள்ளார். மகாகவியின் வார்த்தைகள் வெறும் வாய்ச்சவடாலான பஞ்ச் டயலாக்குகள் அல்ல, பஞ்சில் பற்றிக்கொள்ளும் நெருப்பைப் போன்று செயலாக்க வீரியம் உள்ளவை.