-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #70...

68. இப்போது இல்லாவிட்டால் எப்போது?
திருவள்ளுவரே எங்கள் ஆசான் என்றார்கள் முதலில்.
திருவள்ளுவர் சனாதன எதிரி என்றார்கள் அதன் பின்.
திருவள்ளுவர் இந்துவே அல்ல என்றார்கள் அதன் பின்.
தாமஸின் சீடரே திருவள்ளுவர் என்றும் சொல்கிறார்கள்.
இயேசுவின் போதனையே
வள்ளுவரின் போதனையும் என்று சொல்லி முடிப்பார்கள்.
‘நான் உன் ஒரு கன்னத்தில் அறைகிறேன்
மறு கன்னத்தை காட்டு’ என்று
உலகுக்கு அவர்கள் சொன்னதுபோல
‘நான் உங்களுக்கு இன்னா செய்கிறேன்
நீங்கள் எங்களிடம் நன்னயம் காட்டுங்கள்’ என்கிறார்கள்.
*
இந்து ஆலயங்களில் சமத்துவம் இல்லை என்றார்கள் முதலில்.
அறநிலையத் துறையின் கீழ் ஆலயங்களை அடக்கினார்கள் அடுத்ததாக.
பிரச்னைகளை சீர் செய்துவிட்டு வெளியேறிவிடுவோம் என்றார்கள்
அவர்களின் கூடாரமாக அது இருக்கும்வரை
பிரச்னைகள் தீராதென்பதால்
அடிமைப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்
ஆகம தெய்வங்களை.
இந்து மட்டுமே இந்து ஆலயப் பணியில் சேரலாம் என்பதை
கடவுள் நம்பிக்கை உள்ள யாரும் சேரலாம் என்று மாற்றினார்கள்.
க்ரிப்டோக்களை உள்ளே நுழைத்தார்கள்;
இந்து கடவுளை வெளியேற்றினார்கள்.
*
தமிழ் எங்கள் மூச்சென்றார்கள் முதலில்.
தமிழ் இலக்கியங்களை மலம் என்றார்கள் அடுத்ததாக.
தமிழ் மரபை ஆரிய மரபென்றார்கள்;
‘ஆரியரை’ அந்நியர் என்றார்கள்
தமிழ் மரபு அந்நியமானது அப்படித்தான்.
*
சமத்துவமே எங்கள் இலக்கு என்றார்கள்.
பணம் இல்லையென்றால்
மருத்துவம் படிக்க ஆசைப்படலாமா என்றார்கள்.
அறுபது ஆண்டுகால அராஜக ஆட்சியில்
அரசுப் பள்ளியில் படித்தவர்களை
அடிமாட்டு வேலைக்கு மட்டும் அனுப்பிவிட்டு
‘இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல்’ என்று இளிக்கிறார்கள்.
இலவசமாகக் கொடுக்கும் கல்வியில்
எந்தத் தரத்தையும் எதிர்பார்க்காதே என்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகள் தனியார் பள்ளிகள்
அரசை மீறிச் சாதித்ததைப் பார்த்து
அடிவயிற்றில் அடித்துக்கொண்டு
சமச்சீர் கல்வி என்று சப்பை ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.
சகோதரத்துவமே எங்கள் வழிமுறை என்றார்கள்.
பார்ப்பனரை எதிரி என்றார்கள்.
பட்டியலினத்தினரை அடிமை என்றார்கள்.
பக்தர்களை இழிவுபடுத்தினார்கள்.
பகுத்தறிவுப் போர்வையில்
பைத்தியவாதம் பேசினார்கள்.
(வாரிசுகளுக்கெல்லாம் வாரிக் கொடுத்துவிட்டதால்
எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்க இடம் மறுக்கப்பட்ட கட்சி விசுவாசிகளுக்கு
இதயத்தில் இடம் தந்ததாக இனிக்கப் பேசினார்கள்
இதயத்தில் இருக்கிறாரென்றால்
அவர்கள் சிறுநீர், கக்கூஸ் கழிப்பது உன் கல்லீரலிலா?)
வடவரை எதிரி என்றார்கள்.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபை
வந்தேறி மதமென்று ஒதுக்கினார்கள்.
அனைவருக்கும் கல்வி என்று ஆரம்பித்தார்கள்.
ஆசிரியர்களை கட்சிக் கொத்தடிமை ஆக்கினார்கள்.
கலைத்துறையைக் கைப்பற்றினார்கள்.
நடிகர்களை நபும்சகர்கள் ஆக்கினார்கள்.
நூலக இயக்கம் நடத்தினார்கள்.
ஊடகங்களை ஊப்பிகளாக்கினார்கள்.
கல்விமான்களை கைகட்டி சேவகம் செய்ய வைத்தார்கள்.
கம்யூனிஸ்ட்களை, கைகாட்டும் திசையில் குரைக்கவைத்தார்கள்.
காங்கிரஸை கல்லைக் கட்டிக் கொண்டு
கண்ணையும் மூடிக் கொண்டு கிணற்றில் குதிக்கவைத்தார்கள்.
நடுநிலையாளர்களின் நடு எலும்பைச் சில்லிட வைத்தார்கள்.
நல்லவர்களை அரசியல் சாக்கடையில் இருந்து
நானூறு காதம் விலகி ஓடச் செய்தார்கள்.
நவீன உலகின் சாதனைகளையெல்லாம்
நாங்களே கொண்டுவந்தவை என்றார்கள்.
ஊழல் கலையில் ஊறித் திளைத்தார்கள்.
ஃபாசிஸத்துக்கு புதிய உரை எழுதினார்கள்.
அமைதியாக எதிர்வினையாற்றுங்கள் என்றால்
கலவரம் செய்யுங்கள் என்று அர்த்தம்…
அந்தணர் வாழும் பகுதி என்று குறிப்பு எழுதினால்
அத்தனை கீழறுப்பு வேலையும் செய் என்று அர்த்தம்…
வேறென்ன
பஸ்மாசுரன் அருகில் வந்து
அன்பு மீதுற ஒரு தலையை வருடுகிறான் என்றால்,
சாம்பலாக்கப் போகிறான் என்றுதானே அர்த்தம்?
வள்ளுவரை எரித்தார்கள்.
வள்ளலாருக்கு வலை விரிக்கிறார்கள்.
சேயகத் தமிழர்களை ஒழித்துக் கட்டினார்கள்.
தாயகத் தமிழர்களுக்குக் குறிவைத்திருக்கிறார்கள்.
குருட்டுக் கண்ணன் ஒருவரைப் பார்த்து
ஆசையாக ஆலிங்கனம் செய்ய
இரு கரம் நீட்டுகிறானென்றால்
ஆயிரம் துண்டுகளாக உடைக்கப் போகிறான் என்று அர்த்தம்.
கல்வாரி மலையில் பிரசங்கித்து
இரு கரம் நீட்டியபடி
ஆதி மரபுகள் அனைத்தையும்
ஆலிங்கனம் செய்யப் புறப்பட்டது ஓர் ஆவி.
பஸ்மாசுரனும் பரிசுத்த ஆவியும்
கூடிக் கும்மாளம் போடுகின்றன
பச்சைத் தமிழரின் போதைத் தெருவில்.
பரிசுத்த ஆவி ஆலிங்கனம் செய்யும்படியாக
பஸ்மாசுரனைத் தள்ளிவிட வேண்டும்
ஆலிங்கன ஆவியின் தலையில்
அரக்கன் பஸ்மாசுரன் கைவைக்க வேண்டும்
புதிய அவதாரம் தேவையே இல்லை
உலகுக்கு பாரதம் வழிகாட்ட வேண்டுமென்றால்
புண்ணிய பாரதத்துக்கு
தெய்வீகத் தமிழகம் வழிகாட்ட வேண்டும்.
இப்போது இல்லாவிட்டால் எப்போது செய்வது?
நாம் இல்லாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?
$$$