ஔவை காட்டும் கற்பும் கல்வியும்

கற்பு என்பது பண்பு என்பதில் ஒளவைக்கும் உடன்பாடு இருக்கிறது. அதனை ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் பொதுவில் வைக்கிறாள். கற்பு என்பது சொன்ன சொல் தவறாமல்  நடந்து கொள்வது என்கிறாள். அதாவது உண்மையாக இருப்பதுதான் கற்பு.