-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #61...

61. நாட்டுக்கொரு நீதி!
உங்கள் நாட்டில்
தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுபவர்களை
அடுத்த நாடுகளுக்குள்
அத்துமீறிப் புகுந்து அழிப்பவர்கள் நீங்கள்.
எங்கள் நாட்டில் அப்பாவிகளைக் கொல்லும்
அத்தனை தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் தந்து
அரவணைப்பதும் நீங்களே.
எத்தனை முறை எழுதிக் கேட்டும்
சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு
ஒற்றைத் தீவிரவாதியைக்கூட ஒப்படைத்ததில்லை.
எங்கள் நாட்டைத் தாக்குவோம் என்றும்,
எங்கள் விமானங்களைக் கடத்துவோம் என்றும்,
உங்கள் நாட்டில் இருந்துகொண்டு
உலகறிய மிரட்டல் விடுப்பவனை
உள்ளுக்குள் புகுந்து கொன்றால்
உத்தமர்போல ஏன் வேடம் போடுகிறீர்கள்?
அடைக்கலம் தேடி வந்தவரைக் காப்பது
க்ஷத்ரிய தர்மம் என்கிறீர்களா?
அடுத்தவர் நாட்டுக்குள் புகுந்து அழிப்பது
அதனினும் பெரிய க்ஷத்ரிய தர்மமே.
உங்கள் மக்களின் உயிர் போலத் தானே
உலக நாடுகளுக்கு
அவற்றின் மக்களின் உயிரும் முக்கியம்?
உங்கள் நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கக் கூடாது…
உலக நாடுகளில் தீவிரவாதம்
தலைதூக்காமல் இருக்கவும் கூடாது.
உங்கள் நாட்டில் அமைதியும் வளமும் பெருக வேண்டும்
எங்கள் நாடு தீவிரவாத, பிரிவினைவாதப் பிடியில்
சிக்கிச் சீரழிய வேண்டுமா?
உங்கள் ஆயுத வர்த்தகம் தடையற்று நடக்க வேண்டுமென்றால்
உலகம் முழுவதும் அடித்துக்கொண்டு சாக வேண்டுமா?
தன் மதம் பெருக்கி
உலக மதங்களை அழிக்கும்
உங்கள் மதவெறி மரபணுவில்தான் பொதிந்திருக்கிறது-
உங்கள் அரசியல் நிரல்களும்
பொருளாதார நிரைகளும்.
அதனால்தான்
எழுதிவைக்கப்பட்ட ஆகமங்களையும்
எழுதப்படாத ஆகமங்களையும் கொண்டு எழுந்த
எங்கள் இரட்டைக் கோபுரங்கள் மீது
தொடர்ந்து துல்லியத் தாக்குதல் செய்து வருகிறீர்கள்.
அத்தனை வெள்ளங்களுக்கும் தப்பிச் செழிக்கும்
எங்கள் ஆதிமொழிகளின் வயல்களில்
விஷக்களை மண்டச் செய்கிறீர்கள்.
வரலாற்று வானின் அத்தனை புயல்களிலும்
அணையாமல் காக்கப்பட்டுவரும் ஆதி தர்மச் சுடரை
ஊதி அணைக்கப் பார்க்கிறீர்கள்.
எத்தனை பாலைப் புழுதிப் புயல் சூழ்ந்தாலும்
அழிந்திராத நறுந்திலகத்தையும் அதன் வாசனையையும்
பர்தா போர்த்தி மறைக்கப் பார்க்கிறீர்கள்…
ஆதியில் தோன்றியதுபோலவே
அசையாமல் வீற்றிருக்கும் எங்கள்
பண்பாட்டு மாமலையின் பாறைகளை
பாளம் பாளமாக உடைக்கப் பார்க்கிறீர்கள்.
வேறென்ன-
அனைவரையும் அரவணைக்கும் சித்தாந்தம்
அதிகாரத்தைக் கைப்பற்றாவிட்டால்,
அனைவரையும் அழிக்கும் சித்தாந்தமே
அகிலத்தை அடக்கி ஆளும்.
வாழு வாழவிடு என்று வழிகாட்டும் சனாதன தர்மம்
விஸ்வ குருவாக வேண்டியது
அதன் நன்மைக்காக அல்ல; அகிலத்தின் நன்மைக்கே.
*
உன் வீட்டில் பாம்புப்புற்றுக்கு ஏன் இடம் தருகிறாய்?
உன்னைக் கொத்த மாட்டேன் என்று உறுதிமொழி தந்தால்
எத்தனை குடம் பால் வேண்டுமானாலும் ஊற்றுவாயா?
-என்று
மறைத்துவைத்து சண்டித்தனம் செய்பவனை
சட்டையைப் பிடித்துக் கேட்கத்தான் வேண்டும்.
எங்கள் பக்கம் இல்லையென்றால் எதிரியின் பக்கமே என்று
எகத்தாளம் பேசுபவன் எவனாக இருந்தாலும்
நாம் சொல்ல வேண்டியது ஒன்றே:
தீவிரவாதத்தை அழிக்கும் போரில்
நீ என்னுடன் வந்தால் உன்னோடு சேர்ந்து…
நீ எதிர்த்தால் உன்னையும் எதிர்த்து….
ஆனால்,
பன்முகத்தன்மையைப் பாரினில் காக்க வேண்டுமென்றால்
ஒற்றைப்படைகளை
உள்நாட்டுக்குள் முதலில் அழித்தாக வேண்டும்.
எந்தக் கழுகாக இருந்தாலும்
ஒரு பக்கச் சிறகைக் கொண்டு
தொலைதூரம் பறக்க முடியாது.
எந்தப் பகைவனாக இருந்தாலும்
துரோகிகளின் துணையின்றி வெல்ல முடியாது.
அயல்நாட்டுப் பொந்துகளில் பதுங்கியிருப்பவற்றை
அதிரடியாகக் கொல்வதற்கு முன்
தாய்நாட்டுக்குள் உலவும் பாம்புகளை முதலில்
தடி கொண்டு அடித்தாக வேண்டும்.
எந்தக் கை தன் பையில் இருந்து இந்தப் பாம்புகளை
எடுத்து எடுத்து நம் வீட்டுக்குள் விடுகின்றனவோ
அந்தக் கையை முதலில்
கண்டந்துண்டமாக வெட்டியாக வேண்டும்.
$$$