எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #53...

53. பிறவிக் கோட்பாடும் இழிபிறவிகளும்…
துன்பங்கள் இல்லாத வாழ்க்கை ஏது?
இயற்கையாலும்
இறைவர்களாலும்
சமூகத்தாலும்
சக மனிதர்களாலும்
துன்பங்கள் வரத்தான் செய்யும்.
இன்பங்களுமே அவர்களால்தான் வரும்.
துன்பங்களுக்கெல்லாம் இந்து மதம் காரணமென்றால்
இன்பங்களுக்கெல்லாம் எது காரணம்?
தீமைகளுக்கெல்லாம்
முற்பிறவிக் கோட்பாடே காரணம் என்றால்,
நன்மைகளுக்கும்
மறுபிறவிக் கோட்பாடுதானே காரணம்?
தான தர்மங்கள்,
கோயில் குளங்கள்,
ஒவ்வொருவருக்குமான குல தெய்வங்கள்,
ஒவ்வொரு குலத்துக்கான விழாக்கள், கொண்டாட்டங்கள்,
ஒவ்வொரு குலத்துக்கான கலைகள்…
இந்து தர்மம் வழங்கிய தனித்தன்மையை
ஒடுக்குமுறை என்கிறாய்…
ஆப்ரஹாமிய மதங்கள் வழங்கும் ஒடுக்குமுறையை
விடுதலை என்கிறாய்.
பட்டியலில் சேர்க்கப்படாத
ஜாதிப் பெண்களுக்குக் கிடைத்த அதே காலத்தில்
பட்டியல் ஜாதிப் பெண்களுக்கும்
முலைக் கச்சை கொடுத்ததை
முன்பிருந்திராத அடிமைத்தனத்திலிருந்து கிடைத்த
முற்போக்கு விடுதலை என்கிறாய்…
கொண்டாட்டம் என்கிறாய்.
முன்னெப்போதும் இருந்திராத வகையில்
முழு உடம்புக்கான பர்தா போட்டு முடக்குவதையும்
முற்போக்கு என்றே சொல்கிறாய்.
என்றும் இருந்திராத அடிமைத்தனத்தை இருந்ததென்கிறாய்…
இன்றும் இருக்கும் அடிமைத்தனத்தை இல்லை என்கிறாய்.
*
ஓராயிரம் நன்மைகள் கொண்ட இந்து வாழ்க்கையில்
ஒரு நூறு தீமைகளை மட்டுமே ஏன் பூதாகரப்படுத்துகிறாய்?
கர்மக் கோட்பாட்டைக் காரணம் காட்டி
கஷ்டப்படுபவர்களுக்கு உதவாமல்
ஒற்றை இந்துகூட ஒதுங்கிப் போனதில்லை.
ஞாயிறுதோறும் பாவ மன்னிப்பு கிடைத்துவிடும் தைரியத்தில்
கிறிஸ்தவர்கள் செய்த பாவங்களைப் போல
இந்த உலகில் எந்த மதமும்
இத்தனை கொடுமைகள் செய்யவில்லை.
அகிலம் முழுவதும் ஐரோப்பிய கிறிஸ்தவர் செய்த தீமைகளுக்கு
இந்திய கிறிஸ்தவர்கள் பொறுப்பில்லை.
ஆனால்
ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் செய்த அராஜகங்களைப் பற்றி
அணுவளவும் பேசாமல் இருப்பது தவறு தானே?
கிறிஸ்தவ ஆண்டையை எதிர்த்து
ஒரு வார்த்தைகூடப் பேசமாட்டேன் என்று
அங்கு போய் அடிமையாகத்தான் இருக்கப் போகிறாயா?
அதைவிட
இந்து முன்னோர்களைப் பற்றி அவர்கள்
இட்டுக் கட்டி எழுதிய இழிவுரைகளை
எந்தக் கேள்வியும் இன்றி ஏன் ஏற்றுக்கொள்கிறாய்..?
உன் சொகுசு வாழ்க்கைக்காக
உன் முன்னோரையும் ஏன் இழிவுபடுத்துகிறாய்?
என் குல தெய்வம் எனக்கு என்று சன்னதம் கொண்டு ஆடியவர்களை
ஆகமக் கோவிலில் நுழைவிட வில்லை என்று
அழுபவர்களாக ஏன் அவதூறு செய்கிறாய்?
இன்றைய இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை
ஏற்றுக்கொள்ளக் கூச்சமா?
இழைக்கப்படாத அநீதியைச் சொல்லி
நியாயப்படுத்திக் கொள்கிறாயா?
உனக்கு இன்று கிடைப்பதெல்லாம் சோதரா,
உன் பங்காகக் கிடைக்க வேண்டியதுதான்.
உன் ஜாதிக்குரியதை
உன்னிடமிருந்து பறிக்கும் க்ரிப்டோ
அதை மறைக்கத்தான்
உன் கவனத்தை உன்/ நம் முன்னோர் மீது திருப்புகிறான்.
முன்னோர் மதம் மாறியதற்கு முன்னூறு காரணங்கள்…
ஜாதிக் கொடுமை ஒரு காரணம்…
ஜாதிக் கொடுமை மட்டுமே ஒரே காரணம் அல்ல.
இந்துஸ்தானில் அதிகமானோர் மதம் மாறிய
வடகிழக்கு மாநிலங்களில்
பிராமணர் கிடையாது… வேளாளர் கிடையாது…
க்ஷத்ரியர் கிடையாது… செட்டியார் கிடையாது…
முதலியார் கிடையாது… மூப்பனார் கிடையாது…
ஆசாரி கிடையாது… பூசாரி கிடையாது…
தேவர் கிடையாது… தேவேந்திரர் கிடையாது..
சாம்பவர் கிடையாது… அருந்ததியர் கிடையாது….
வண்ணார் கிடையாது… வடுகர் கிடையாது….
வர்ணாஸ்ரமம் கிடையவே கிடையாது
மத மாற்றத்தின் ஆணி வேர்
எங்கிருக்கிறது என்பது புரிகிறதா?
இந்துத்துவத் தேவர் இந்துத்துவ தேவேந்திரரை சகோதரராக மதிப்பார்…
கிறிஸ்தவ தேவர் கிறிஸ்தவ தேவேந்திரரை ஏற்க மாட்டார்.
சீர்திருத்தத்தின் வேர்கள் எங்கிருக்கின்றன புரிகிறதா?
சக மனிதரை நேசிக்கச் சொன்ன கிறிஸ்தவத்தில்
புராட்டஸ்டன்ட்களை ஏன்
கொன்று குவித்தனர் ரோமன் கத்தோலிக்கர்?
ரோமன் கத்தோலிக்கரை ஏன்
கொன்று குவித்தனர் புராட்டஸ்டண்ட்கள்?
இந்துக்களால் கொடுமைப்படுத்தப்பட்ட இந்துக்களைவிட…
முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் அதிகம்.
கிறிஸ்தவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அதிகம்.
முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அதிகம்.
கிறிஸ்தவர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் அதிகம்.
கிறிஸ்தவர்களாலும் முஸ்லிம்களாலும்
கொடுமைப்படுத்தப்பட்ட இந்துக்கள் மிக அதிகம்.
அதிலும்
அந்தக் கொடுமைக்கு அதிகம் ஆளானது பிராமணரில்லை;
இடைநிலை சாதியினரும் கடைநிலைச் சாதியினருமே.
க்ஷத்ரியர் அனைவருமே பிராமணரில்லைதானே?
அவர்கள்தானே ஆட்சி அதிகாரங்கள் பறிக்கப்பட்டு
ஆங்கிலேயர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள்?
அவர்கள் தானே அராஜக முஸ்லிம் படைகளால்
அணு அணுவாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள்?
முதல்நாள் கண்ணைத் தோண்டினார்கள்…
மறுநாள் கையை வெட்டினார்கள்…
மறுநாள் காலை வெட்டினார்கள்….
இறுதியாகத் தலையை வெட்டி
வைக்கோல் திணித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று
கோட்டை உச்சியில் நட்டுவைத்தார்கள்…
கழுகுகள் வந்து கொத்திக் கொத்தித் தின்னும்படியாக.
வெட்டி எறிந்த கால்களையும் கைகளையும்
நாயும் நரியும் கடித்துத் தின்றன.
வீர க்ஷத்ரிய குல திலகங்களே
இன்று நீங்கள் தூக்கிச் சுமக்கும்
இஸ்லாமிய, கிறிஸ்தவ மன்னர்கள்
உங்களுக்குச் செய்தவை இவையே.
வைசியர் அனைவரும் பிராமணர் இல்லைதானே?
கிறிஸ்தவ கிழக்கிந்திய கம்பெனியின் வணிகம்
முடக்கிப் போட்டது எல்லாம்,
வைஸ்ய முன்னோர்களின் வணிக வாழ்க்கையைத் தானே?
வீசும் காற்றுக்கு ஏற்ப பாய்மரம் விரித்து
பார் முழுவதும் கடல் பயணம் செய்த
விவேக வைஸ்ய குலங்களே,
உங்கள் நாட்டுக்கோட்டை அரண்மனைகளில்
நற்கதி கிட்டாது அலையும்
ஆன்மாக்களிடம் சென்று கேளுங்கள்…
உங்கள் முன்னோர்களை
ஓட்டாண்டிகளாக்கி ஓடவிட்டது யார் என்று!
நில உடமை ஜாதிகள் அனைத்தையும்
நடுத்தெருவில் நிற்க வைத்து
சாட்டையால் அடித்து வரியைப் பிடுங்கினார்கள்…
வரி கொடுக்காத ஆண்டை வீட்டுப் பெண்களின் முலைகளை
அத்தனை பேர் முன்னாலும் கசக்கினார்கள்…
உலக நாடுகளில் உச்சம் தொட்ட
நம் நெசவுத் தொழிலை முடக்க
நெசவாளர்களின் மணிக்கட்டை முறித்தார்கள்…
தறிகளை உடைத்தார்கள்…
அந்த பிரிட்டிஷாரின் ஒக்கலில் ஏறி உட்கார்ந்துகொண்டு
பிராமணரல்லாதார் இயக்கம் ஆரம்பித்த
பிற்போக்கு சக்திகளுக்கு,
குலத் துரோகிகளுக்கு
தாயைக் கூட்டிக் கொடுத்த
அநீதிக்கட்சி அசுரர்களுக்கு
இந்து தர்மம் பற்றிப் பேச
என்ன யோக்கியதை இருக்கிறது?
மாண்பு மிகு பிரிட்டீஷாரை
இந்தியா முழுவதும்
பல்லக்கில் சுமந்தது பட்டியல் வகுப்பினர்தான்…
அவர்கள் மோண்டு பேளும் கலங்களை
முதுகில் கட்டிக் கொண்டு
ஊர் ஊராக அலைந்ததும் பட்டியல் வகுப்பினர்தான்.
மாட்டுக்கறி சமைக்கத் தெரிந்ததால்
கூட்டிக்கொண்டு திரிந்தவனை
மீட்பரென்று சொல்லக் கேவலமாக இல்லையா?
அவனுக்குக் கால் பிடித்து, கைபிடித்து
குண்டி கழுவியும் விட்டதெல்லாம் யார் என்று
அவன் எழுதியதையே பார்த்துத் தெரிந்துகொள்.
க்ரிப்டோ பர்ணாந்து
எதிரிகளை இனம் காணத் தெரியாவிட்டால்
எந்தப் போரிலும் வெல்ல முடியாது.
துரோகிகளைக் களைந்தெறியாவிட்டால்
எந்தப் போர் வியூகமும் வெற்றி தராது.
$$$