திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -82

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எண்பத்திரண்டாம் திருப்பதி...

82. பிரமனுக்காக நதியைத் தடுத்த திருவெட்கா

யசோதைக்காக யமுனை நதி கடந்து,
வேகவதி நதிக்காக நடுவே கிடந்து – ஆழ்வார்
திருமழிசைக்காக பின்சென்று வந்து – இங்கு
சொன்ன வண்ணமாய்க் கிடப்பவனே உன்
திருப்பாதம் என்றும் பணிந்து கிடப்பேனே!

இது பொய்கையாழ்வார் அவதாரத் தலம். காஞ்சியில் உள்ள திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் சயனத் திருக்கோலம். பிரமனின் வேள்வியைக் காக்க, வேகவதி ஆற்றின் குறுக்கே அனையாக சயனித்து  யக்ஞவாடியைக் காத்தார் பெருமாள். வேகவதி ஆறே வெட்கா என்றாகியது. எனவே பிரமன் சொல்லியவண்னம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

மூலவர்: ஸ்ரீ சொன்னவண்ணஞ்செய்த பெருமாள் (புஜங்க சயனம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: கோமளவல்லி
விமானம்: வேதஸார விமானம்
தீர்த்தம்: பொய்கை புஷ்கரிணி
மங்களா சாசனம்: பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 07.30 மணி வரை

எப்படிச் செல்வது?

காஞ்சிபுரம், ரங்கசாமி குளத்திற்கு வடக்கே உள்ளது இத்திருத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

வேண்டியதை வேண்டியபடி கேட்டுப் பெறலாம் இத்திருத்தலத்தில். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment