திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -78

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எழுபத்தெட்டாம் திருப்பதி...

78.  ஜனமேஜயனுக்கு காட்சி தந்த திருப்பாடகம்

பிஞ்சு வயதில் வெண்ணெய் திருடி,
நஞ்சு முலை உண்டு,
அஞ்சு தலை மீது ஆடி – திருப்பாடகத்தில்
பஞ்ச பாண்டவத் தூதனாக அமர்ந்து – என்னை
கிஞ்சிதமும் கவலையில்லாமல் காப்பவனே – கிருஷ்ணனே
உன் திருப்பாதம் சரணடைந்தேனே!

ஜனமேஜய மகாராஜாவுக்கு வைசம்பாயனர் மகாபாரதக் கதையைக் கூறியபோது, கண்ணனின் விஸ்வரூபத்தைக் காண மகாராஜா ஆசைப்பட்டார். அதற்கு அவர் இங்கு யாகம் செய்யுமாறு வைசம்பாயனர் கூறினார். அதன்படி திருப்பாடகத்தில் அஸ்வமேத யாகம் செய்த ஜனமேஜயனுக்கு கண்னபெருமான் காட்சி அளித்தார் என்கிறது தலபுராணம்.

கருவறையில் 27 அடி உயரத்தில் கம்பீரமாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார் பாண்டவதூதப் பெருமாள்.

மூலவர்: ஸ்ரீ பாண்டவதூதப் பெருமாள் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  ருக்மிணி, சத்தியபாமா
விமானம்: பத்ர விமானம்
தீர்த்தம்: மத்ஸ்ய தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். திருமழிசையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 07.30 மணி வரை

எப்படிச் செல்வது?

இத்தலம் பெரிய காஞ்சிபுரத்தில்,  ஏகாம்பரநாதர் கோயிலுக்கு தென்மேற்கே அமைந்திருக்கிறது.

சேவிப்பதன் பலன்கள்:

எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும், செய்கின்ற வேலை தடை இல்லாமல் நடக்கவும், திருப்பாடகம் வந்து இங்குள்ள கோயிலில் வளர்பிறை சதுர்த்தி அன்று பெருமாளை வேண்டிக் கொண்டு ஹோமம் செய்தால் அனைத்துத்  தடைகளும் நீங்கும். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து தரிசித்தால் அவர்களது கஷ்டங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

$$$

Leave a comment