-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தேழாம் திருப்பதி...

67. நகுலன் புனரமைத்த திருவண்வண்டூர்
மலையப்பன், நாமகிரியை நெஞ்சில் உடையப்பன், சடையப்பன், சாபம் தீர்த்த திருக்கண்டியூரப்பன், குட்டப்பன், உலகளந்த காலப்பன் - திருக் குறளப்பன், குறைதீர்க்கும் கண்ணப்பன் – என் பாட்டப்பன், என் குலம் காக்கும் என் அப்பன், திருவண்வண்டூரில் நிற்கும் பாம்பனையப்பனே!
பஞ்ச பாண்டவர்கள் தொடர்புடைய தலம் என்பதால் திருப்பாணடவனூர் என்று அழைக்கப்பட்டு, அதுவே மருங்கி திருவண்வண்டூர் ஆயிற்று. நகுலனால் புனர் நிர்மானம் செய்யப்பட்ட ஆலயம் இது. பிரமனால் சபிக்கப்பட்ட நாரத மகரிஷி இங்கு வந்து தவம் புரிந்து பெருமாள் அருளால் நாரதீய புராணம் உள்ளிட்ட நூல்களை இயற்றினார் என்கிறது தல புராணம்.
மூலவர்: பாம்பணையப்பன், கமலநாதன் (நின்ற திருக்கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: கமலவல்லி நாச்சியார்
விமானம்: வேதாலய விமானம்
தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம், பம்பை ஆறு
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
கேரள மாநிலம், செங்கன்னூரிலிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
செய்த பாவங்கள் விலகவும், நினைத்தது நடப்பதற்கும் வந்து வணங்க வேண்டிய தலம். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$