திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -55

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தைந்தாம் திருப்பதி...

55.  வேத வித்துக்கு தரிசனம் தந்த வரகுணமங்கை

மனம் அது ஒடுங்கி சுழிமுனை விழித்து,
மரம் போல் தேகம் மரத்து,
கணங்கள் சுற்று மௌனத்தில் மூழ்கி,
முழுச்சூரியனாய் மூன்றாவது கண்திறந்து,
கனவெளியில் ஆன்மா மிதந்து,
காணத் தேடிய முனிவர்க்கும் காண முடியா உன்னைக்
காண வேண்டும் விஜயாசனப் பெருமானே – நீ
திருவரகுணமங்கையில் உன் திருக்காட்சி தருவாயே!

வேதவித்து என்ற பிராமணரின் மந்திரஜப பிரார்த்தனைக்காக, அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்த திருத்தலம். சந்திரனுக்குரிய பரிகாரம் செய்வதற்கான நவ திருப்பதி.

மூலவர்: விஜயாசனப் பெருமாள் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: வரகுணவல்லி
உற்சவர்: எம் இடர்க் கடிவான்
விமானம்: விஜயகோடி விமானம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரிணி
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 06.00 மணி வரை

எப்படிச் செல்வது?

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம் (நத்தம்).

சேவிப்பதன் பலன்கள்:

சந்திர பரிகாரத் தலம். வேண்டியதை வேண்டியபடி தரும் பெருமாள் என்பதால் எல்லோரும் வந்து வணங்க வேண்டிய தலமாகும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment