-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்திரண்டாம் திருப்பதி...

52. பூமாதேவி குண்டலம் வழங்கிய தென்திருப்பேரை
தாமரைமலர் மீது, நரசிம்மன் நல்மார்மீது நாமகிரித் தாயாராய், நாமகிரியில் அமர்ந்தவனே! நான்முகனும் அடியபணிய வான் புகழும் தென் திருப்பேரை பெருமானைத் தேடிவந்தேன்- எனக்கு மகர நெடுங்குழைக்காதர் மனங்கனிய அருள்புரிவாயே!
நவதிருப்பதிகளுள் ஒன்று; சுக்கிரன் தலம். துர்வாசர் சாபம் நீங்க மகர குண்டலங்களை பூமாதேவி பெருமாளுக்குச் சாற்றிய தலம் இது. அதனால் மகரநெடுங்குழைக்காதர் என்று பெருமாள் பெயர் பெற்றார்.
மூலவர்: மகரநெடுங்குழைக்காதர், நிகரில் முகில்வண்ணன் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: திருப்பேரை நாச்சியார், குழைக்காத நாச்சியார்
விமானம்: பத்ர விமானம்
தீர்த்தம்: சுக்கிர தீர்த்தம், சங்க தீர்த்தம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார். மணவாள மாமுனிகளும் பாடியுள்ளார்.
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?
இத்தலம் ஆழ்வார் திருநகரிக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில், தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
மழை பொழிய, நீர் கஷ்டம் விலக, பஞ்சம் விலக இங்கு வந்து இப்பெருமாளை வணங்கப் பெற பலன் கிடைக்கும். பஞ்சம் விலகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$