உருவகங்களின் ஊர்வலம் -22

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #22

22. செங்கொடியே அவமானம்!

செங்கோல் அல்ல;
வாரிசு அரசியலே மக்களாட்சியின் அவமானம்.

மன்னராட்சி அல்ல;
கேடு கெட்ட கம்யூனிஸமே மனித குலத்தின் அவமானம்.

இளவரசர் உதய நிதி வாழ்க என
இருநூறு உரூபா உடன்பிறப்புகளைவிடக் கேவலமாக
உருண்டு புரண்ட மக்கள் பிரதிநிதிகளே
மக்களாட்சியின் அவமானம்.

தாஜா அரசியல் செய்த தப்பான தலைமையின் கீழ்
அப்பாவியாக அணி திரண்டு
தியாக வேள்வியில் தம்மை பலி கொடுத்தவர்கள்
வாக்களித்துத் தேர்ந்தெடுத்த வல்லபாய் படேலே
நவீன தேசத்தின் முதல் மக்கள் பிரதிநிதி.

வம்படியாக அவரை ஓரங்கட்டிவிட்டு
வஞ்சகமாக நியமிக்கப்பட்ட நேருவே
சுதந்தர இந்தியாவின் முதல் சர்வாதிகாரி.

நெருக்கடி நிலையை அறிவித்தவள்
அடுத்த சர்வாதிகாரி.

அந்த நீசப் பரம்பரையின் நீட்சியே
இன்றைய இண்டி கூட்டணி.

கள்ளத்தனமாக அரியணை ஏறியவனுடைய ஆட்சியும்,
அந்த மாமா மன்னன் வாரிசுகளின் ஆட்சியும்,
அதிகார வர்க்க ஊடுருவலுமே மக்களாட்சியின் அவமானம்.

என்ன ஒரு கொடூரமான வேடிக்கை பாருங்கள்…

கைத்தடி என்று தூக்கி வீசியெறியப்பட்ட காலத்தில்
கேடு கெட்ட மன்னர்களின் ஆட்சிகள் நடந்திருக்கின்றன.

அதன் பின்
அறுதிப் பெரும்பான்மை தந்து மக்கள்
அவர் தம் நாயகரை
மன்னராகவே ஆளச் சொல்லி அழகு பார்த்திருந்தனர்.

எதிரில் வந்து உட்காரக்கூட
எந்தக் கட்சிக்கும் இடமே தந்திருக்கவில்லை.

என்றைக்கு
மன்னரின் செங்கோல் மாண்பை மீட்டெடுத்ததோ அன்றைக்கு
வலுவான எதிர்க்கட்சிக்கு வாக்களித்து
மக்களாட்சியை ஆரம்பித்திருக்கின்றனர் மக்கள்.

வேறென்ன,
இன்று செங்கோலே
மக்களாட்சியின் அடையாளச் சின்னம்.

*

மன்னரெல்லாம் ஆணாதிக்கவாதிகளாம்
அந்தப்புரங்களில் பெண்களை
அடிமைப்படுத்தி அடைத்து வைத்திருந்தனராம்.

அன்றைய கதை இன்றைக்கு எதற்கு?
இன்று
ஊடகக் கும்பலும்
ஊச்சாளிப் பிரபலங்களும்
லெட்டர் பேட் கட்சிகளும்
அரசியல் வாரிசுகளின் அந்தப்புரத்தில்தானே
அடைபட்டுக் கிடக்கின்றன?

அந்தப்புர மகளிரிடம்
அரண்மனை வேலையை மட்டுமே
அன்றைய மன்னர்கள் வாங்கினர்.

அறிவுஜீவிப் போர்வையில்
கருத்தரங்கங்களில், காட்சி ஊடகங்களில்
க்ரிப்டோ தேசியத்தின் கூவல் திலகங்களாக
கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு திரிய வைக்கவில்லையே?

இன்றும்
திரையுலகப் பிரபலங்கள் கட்டி வைத்திருக்கிறான்கள்
அந்தக் காலம் போன்ற அதே அந்தப்புரங்களை…

தாய்லாந்திலும் அரபு நாட்டிலும்
அந்தப்புரங்கள் கட்டிவைத்திருக்கும்
அரசியல் வாரிசுகளிடம்
அட்ரஸ் கேட்டு வாங்கிக் கொள்.

வழிகாட்டித் தொழிலுக்கு உதவும்.

செங்கோல் மன்னராட்சியின் சின்னமாம்…
மக்களாட்சியில் அது அவமானமாம்.

சொல்வது யார்?
ஜார் மன்னராட்சியை ஒழிக்கிறேன் என்று
போலிப் புரட்சி செய்து அதைவிடக் கொடூரமான
பொலிட் பீரோ ஆட்சி செய்த கும்பல்.

543 தொகுதிகளில்
கூட்டணி இல்லாமல் வென்றது 4
கூட்டணியோடு வென்றது 4.

மக்களாட்சி காலத்திலேயே
மக்களால் நிராகரிக்கப்பட்ட மக்கள் போராளிகளுக்கு
மன்னராட்சி கால மன்னர்களைப் பற்றிப் பேச
என்ன அருகதை இருக்கிறது?

காங்கிரஸ் கும்பல்
இந்தக் கள்ளச் சாராய ஆட்சியை
காமராஜரின் ஆட்சியாகப் பார்க்கிறது.

கம்யூனிஸக் கும்பலோ
சூட்கேஸ் வாங்கிக் கொண்டு
சோளக்கொல்லை பொம்மையின் ஆட்சியை
ஜோசஃப் ஸ்டாலினின் ஆட்சியாகப் பார்க்கிறது.

ஒட்டுமொத்த தேச மக்களால்
ஓரங்கட்டப்பட்ட பின்னும்
அதிகார மையங்களில் ஊடுருவியிருக்கும்
ஒட்டுண்ணிக் கும்பல்
மக்களாட்சியின் மாண்பு பற்றிப் பேசுவதுதான்
மனித குலத்தின் ஆகப் பெரிய அவமானம்.

மக்கள் பிரதிநிதிகளின் மன்றத்தையே
மாட்டுத் தொழுவமாகச் சொல்லி
ஜனநாயகத்தையே ஒழித்துக்கட்டும்
கம்யூனிஸக் கயவன் சொல்கிறான் –
செங்கோல் ஆணாதிக்கத்தின் அடையாளமாம்

தர்ம சங்கல்பம் எடுப்பவர்களுக்குப் பூணூல்…
திருமணமான பெண்களுக்குத் தாலி…
அரசருக்கும் அரசிக்கும் செங்கோல்!

தர்ம சிந்தனைகளை
உடனிருந்து உணர்த்திக் கொண்டேயிருக்கும்
ஓர் உருவக் குறியீடு.

போர் தொடங்கும் முன் நிராயுதபாணிகளை
பாதுகாப்பான இடத்துக்குப் போகச் சொன்னது செங்கோல்.

வீடு தேடிக் கைது செய்து
குலாக் வதை முகாமில் தள்ளிக்
கொலை செய்தது செங்கொடி.

இந்த ஈத்தரையை கம்யூனிஸத்தோடு
இணைத்துப் பேசுவதே இழிவு.

*

வாரிசு அரசியல் செய்யும்
சர்வாதிகாரக் கும்பல் எல்லாம்
மக்களாட்சி பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.

மக்களாட்சி நாயகரே நீங்கள் கொஞ்சம்
மன்னராகிக் கொள்ளுங்களேன்.

வேல் ஏந்தாமல் வெற்றி கிடைக்காது-
செங்கோல் ஏந்தும் காவலரே!

குடிப்புறம் காத்து ஓம்புதல் மட்டுமல்ல;
குறுமதியாளர் கூட்டத்தின்
குற்றம் கடிதலுமேயாம் வேந்தன் தொழில்.

கொலையில் கொடிய கம்யூனிஸ்ட்களை வேந்தொறுத்தல்
களையெடுத்ததற்குச் சமம்.

முளையிலேயே கிள்ளப்படாததால் முள் மரங்கள்
மண்டிவிட்டன நம் நந்தவனம் முழுவதும்.

களைக் கொத்தி பத்தாது.

தீப்பந்தம் ஏந்தித் தீக்கிரையாக்குங்கள்
தீய சக்திக் கும்பலை.

$$$

Leave a comment