உருவகங்களின் ஊர்வலம் – 21

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #21

21. இந்த டீல் நமக்குள்ளவே இருக்கட்டும்!

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் எங்களுக்கு
40க்கு 40 வெற்றி தந்திருக்கிறார்கள் மக்கள்.
அவர்களுக்கு அன்புப் பரிசாக
அதிக மெத்தனால் கலந்த சாராயத்தைத் தந்திருக்கிறோம்.

இதற்கு முன் முள்ளிவாய்க்காலில்
நாங்கள் செய்த சரித்திரச் சாதனைகளுக்கு
எங்களுக்கு ஆட்சிப் பரிசு தந்தார்கள்.

இப்படியாக-
நாங்கள் அவர்களைக் கொல்லுவோம்
அவர்கள் எங்களுக்கு ஆட்சியைத் தருவார்கள்.
அவர்கள் எங்களுக்கு ஆட்சியைத் தருவார்கள்
நாங்கள் அவர்களைக் கொல்லுவோம்.

எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாத
எங்கள் திராவிட மாடல் இது.

இவ்வளவு ஏன்…
இலாகா பிச்சை கேட்டு சக்கர நாற்காலியை
இரத்தம் உலரும் முன்னே உருட்டிச் சென்று
இத்தாலிய மாஃபியா ராணியின் கைகளில்
இதமாக, மண்டியிட்டு முத்தமிட்டோம்.

கேட்ட இலாகாவைத் தந்துவிட்டு
திஹார் ஜெயில் கேட்டையும் திறந்துவிட்டாள்.
அப்போதும் அவளுக்கு அடிபணிந்து
அவளுடைய ஆடைகளைத் துவைத்து
அயர்ன் செய்து கொடுத்து வருகிறோம்.

மிசா ஜெயிலில் போட்டு
மொகரையைப் பெயர்த்தபோதும்
இவளின் மாமியாரைக் கண்டு
காலிடுக்கில் வாலைச் சுருட்டிக்கொண்டு
‘மருமகளே வருக’ என்று மண்டியிட்ட
மானங்கெட்ட மாண்புமிகுக் கும்பல் நாங்கள்.

அவ எங்களை அடிக்க
பதிலுக்கு
நாங்க அவகிட்ட அடி வாங்க…

ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு என்கிறீர்களா?
நாலு ஃபைல்ஸ் வெளிய வந்திருக்கு…
நாற்பது ஃபைல்ஸ் அவகிட்ட இருக்கு ப்ரோ.
சநாதனத்தை எதிர்த்தால்தான் சாப்பாடுன்னு சொன்னால்
40 அல்லக்கைகளும்
கருத்தைக் கன கச்சிதமாகப் பிடித்துக் கொண்டுவிட்டோம்
சநாதனத்தை அழிக்கப் புறப்பட்ட
எங்கள் இளைய சாத்தான் வாழ்க என்று
கூவிக் கோஷமிட்டோம்.

*

பிரபாகரனைக் கொன்றவனுக்கும்
பொன்னாடை போர்த்தினோம்.
ராஜீவைக் கொன்றவனுக்கும்
பொன்னாடை போர்த்தினோம்.
நாங்க பிடுங்கி அடிக்கறது எல்லாமே
பிரிவினைவாத ஆணிகள்தான்.

*

நீங்கள் ஆட்சியைப் பிடிச்சிருக்கலாம்…
அயோத்தியில தோத்துட்டீங்கள்ல?
நாங்கள் கீழேதானே விழுந்தோம்…
பென்சில் மீசைல மண் ஒட்டவே இல்லையே?

*

ஐம்பதாண்டு கால ஆட்சியில்
அரசுப் பள்ளியில் இருந்து ஒருத்தரைக்கூட
எங்கள் மெடிக்கல் காலேஜ் மாஃபியா
மெடிசின் படிக்கவிடவில்லை.
ஆனாலும்
ஒரே ஒரு தற்கொலைக் காட்டி,
ஒத்தைச் செங்கல்லைத் தூக்கிக் காட்டி
ஒன்றியத்தை ஓட ஓட விரட்டுகிறோம் பார்த்தீர்களா?

கல்வி உரிமை…
காவிரி உரிமை…
கச்சத்தீவு உரிமை…
அத்தனையும் அஞ்சி நடுங்கி விட்டுக்கொடுத்ததும் நாங்கள்தான்.
மாநில உரிமைப் போராக இன்று அதையெல்லாம்
மடைமாற்றுவதும் நாங்கள்தான்!

இங்க எல்லாமே நாங்கதான்.
ஆனால்,
கும்மிடிப்பூண்டி தாண்டியதும் குனிய ஆரம்பித்தால்
தில்லி போய் சேர்பவர்களை
குழியில் இருந்துதான் தூக்கிவிட வேண்டியிருக்கும்.
அது வேற டிப்பார்ட்மென்ட்.

எங்களுக்கு
பில்டிங் ஸ்ட்ராங்… பேஸ்மெண்ட் வீக்.
திஹாரில் இருந்து திரும்பி வந்ததும்
‘எங்க ஏரியா உள்ள வராதே’ என எகத்தாளமும் செய்வோம்.
இ.டி. ஐ.டி., சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட் என
நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது.
ஆனாலும்,
அடி வாங்கின எங்களுக்குத்தான் எப்பவுமே கப்பு.

கோபால மேனன் புத்திரன் கொமட்டுலயே குத்தினார்.
கோமளவல்லி குமுறக் குமுறக் குத்தினார்.
ஒரு இடத்துலயும் ஓடவே இல்லையே…
ஸ்டெடியா நிண்டு அடி வாங்கும்
சில்லறைக் கூட்டம் நாங்கள்.

‘கை’யைக் கடன் வாங்கிக் கொஞ்சம் நீங்கள் அடித்தால்
கப்புனு உங்க காலையும் பிடிச்சிக்குவோம்.
அடிக்க வர்றவனுக்கு நாங்க ஆயுளுக்கும் அடிமை.
அடிவாங்கிட்டு ஓடறவனுக்கு ஆயுளுக்கும் நாங்களே ஆண்டை.

இந்த டீல் நமக்குள்ளவே இருக்கட்டும்.
கடுகளவு கசிஞ்சாலும் கந்தரகோலமாகிடும்.
யாருக்கு?
நான் என்னையச் சொன்னேன்.
வரட்டா…?

இ.டி சார்…
நேத்திக்கு ரெய்டுக்கு வர்றேன்னு சொன்னீங்க வரவே இல்லை?
பைனாப்பிள் கேசரி ரெடி பண்ணிட்டுக் கூப்பிடுங்க பாஸ்.

*

என்.ஐ.ஏ. கைதா…
எங்களோட எடுபிடிகளைத் தானே?
எவ்வளவு வேணும்னாலும் பண்ணிக்கோ…
கியரை மாத்திப் போட்டு
க்ரிப்டோ பக்கம் மட்டும் திரும்பிடாதே.
உன் எதிரி
எனக்கும் எதிரிதான் ஜி
நானே போட்டுக் குடுத்துட்டு
பூட்டின வீட்டுக்கு முன்னால நின்னு
ஃபுல் மப்புல சவுண்ட் விட்டுக்கறேன்.
நீ புகுந்து விளையாடிக்கோ.

(இந்தப் பக்கம் திரும்பி)
கூடச் சேர்ந்து கோஷம் போடு பாய்.
’அதிர்ந்தது நாடாளுமன்றம்
குலுங்கியது செங்கோல்’
வீ வாண்ட் மோர் எமோஷன்;
இல்லைன்னா
பாஜக புகுந்துடும் பாய்.

இந்து தேசியம் வேண்டாம்
திராவிட தேசியமும் வேண்டாம்
தமிழ் தேசியம் பக்கம் போகலாம்னு
தப்பித் தவறிக்கூட நினைச்சுடாத பாய்.
யாழ்ப்பாணம், காட்டாங்குடி மாதிரி
உள் நாட்டுக்குள்ளயே
ஓட ஓட விரட்டி அடிப்பானுங்க.
என்னை விட்டா உனக்கு
எந்த நாதியும் இல்லை.
என் கிருபையே உனக்குப் போதும்.
என் எதிரிதான்
உன் எதிரியும் பாய்.

குரைக்கச் சொல்லும்போது குரை.
வீசற எலும்புத்துண்டை கவ்விட்டு ஓடு.
இங்க நாங்கதான் கிங்…
நாங்க வெச்சதுதான் சட்டம்.
புரியுதா பாய்.

புரிஞ்சுக்கணும்
இல்லைன்னா
புரிய வைப்போம்.

$$$

Leave a comment