-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தொன்பதாம் திருப்பதி...

39. ஸ்வேதனுக்கு தீர்க்காயுள் அருளிய திருவெள்ளக்குளம்
கொடும் மழைக்காக கோவர்த்தனம் கொண்டாய்! கடும் பகைக்காக நஞ்சுமுலையுண்டாய் - நீ வரும் பக்தர்களுக்காக வரம் தருபவனாய் வெள்ளக்கோவில் வந்து சீனிவாசனாய் நின்றாய்!
துந்துமார ராஜாவின் மகன் ஸ்வேதனுக்கு நீண்ட ஆயுள் அருளிய பெருமாள் இவர். திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணனாக கருதப்படுபவர். திருநாங்கூரைச் சூழ்ந்த திவ்யதேசங்களுள் ஒன்று. மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி அளித்த தலம்.
மூலவர்: ஸ்ரீ அண்ணன் பெருமாள், ஸ்ரீநிவாசன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அலர்மேல்மங்கை.
உற்சவர்: ஸ்ரீநிவாசர் – பத்மாவதி, பூவாரி திருமகள்.
விமானம்: தத்வத்யோக விமானம்
தீர்த்தம்: ஸ்வேத புஷ்கரிணி, வெள்ளக்குள தீர்த்தம்.
தல விருட்சம்: வில்வம், பரசு
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
சீர்காழியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் தென்கிழக்கே, திருநாங்கூர் அருகே இத்தலம் அமைந்துள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
செய்த பாவம் தொலையவும், ஜாதகத்தில் தோஷம் இருந்தால் நிவர்த்தி செய்யவும், யம பயம் நீங்கவும், இங்கு வந்து இப்பெருமாளை சேவித்து வர நிவர்த்தி ஆகும். 4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$