திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -37

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தேழாம் திருப்பதி...

37. சந்திரனின் சாபம் போக்கிய திருமணிக்கூடம்

கருடனுக்கு கனிந்து சந்திரனின் சாபம் நீக்கி,
அனுமனுக்கு உடையவவனாகி, ஆழ்வார்களைக் காத்து,
திருமணிக் டக் கோயிலில் நின்று திருமாமகனை வரித்து,
வருபவர்களை எல்லாம் காக்கும் வரதராஜனை வணங்குவோமே!

ராகு – கேதுவுக்கு அஞ்சி மறைந்திருந்த சந்திரனின் சாபம் போக்கிய பெருமாள் இவர். திருநாங்கூரைச் சூழ்ந்த திவ்யதேசங்களுள் மூன்றாவது.

மூலவர்: மணிக்கூட நாயகன், வரதராஜப் பெருமாள் (நின்ற திருக்கோலம் –கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  திருமாமகள் நாச்சியார்
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில்  நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை

எப்படிச் செல்வது?

திருநாங்கூரில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

பெண்களுக்கு திருமணத்தடை நீக்கும் தலம் இது. வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் தடைகளையும போக்கக் கூடிய தலமும் கூட.  7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க நலம் பெறுவார்கள்.

$$$

Leave a comment