-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தாறாம் திருப்பதி...

36. சூரியனின் அச்சம் நீக்கிய திருத்தெற்றியம்பலம்
ஆயிரம் நாமம் கொண்ட ஆதிமூலமே, ஆதவன் சாபம் தீர்த்த வேத மூலமே, அகோபிலத் தூணில் தோன்றிய சிங்க ரூபமே - ஆயினும் ஐயனே யான் விரும்பியது செங்கண்மாலின் காணக் கிடைக்காத கிடந்த கோலமே!
மேடான இடத்தில் உள்ளதால் திருத்தெற்றி அம்பலம் என்று பெயர் பெற்றது ராகு, கேதுவுக்கு அஞ்சி மறைந்திருந்த சூரியனுக்கு அச்சம் நீக்கிய பெருமாள் இவர். பள்ளிகொண்ட பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
மூலவர்: செங்கண்மால் பெருமாள் (கிடந்த திருக்கோலம் –கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: செங்கமலவல்லி
விமானம்: வேத விமானம்
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 1000 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்தலம் திருநாங்கூரிலே உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
அரசியல் செல்வாக்கு இழந்து கொண்டிருப்பவர்கள், அரசாங்கத்தில் உயர்பதவி தேடுபவர்கள், குழந்தை இல்லாதவர்கள், இங்கு வந்து பெருமாளைப் பிராரத்தித்து வர, நினைத்தது நடக்கும். 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது.
$$$