திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -35

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தைந்தாம் திருப்பதி...

35. ஸ்ரீராமன் தோஷம் போக்கிய திருச்செம்பொன்செய்கோவில்

கோபாரம் தங்கம் கோபாலன் கொடுத்த ஊர்!
பூபாரம் குறைத்து ஸ்ரீராமன் வந்த ஊர்!
துலாபாரம் தந்து தோஷம் தொலைத்த ஊர்!
பேரருளாளர் பெருமாள் நின்ற ஊர் - இந்த
திருச்செம்பொன் செய்கோவிலே!

ராவண வதத்தால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக்க, 1000 பாரம் தங்கத்தால் பசுவைச் செய்து அதில் நான்கு நாட்கள் இருந்து தோஷம் போக்கிய ஸ்ரீராமன், அதனை ரிஷிகளுக்கு தானமாகக் கொடுத்தார். அதைக் கொண்டு, த்ருடநேத்ர முனிவர் அமைத்த கோயில் இது. திருநாங்கூரில் உள்ள ஐந்தாவது திவ்யதேசம்.

மூலவர்: பேரருளாளப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: அல்லிமாமலர் நாச்சியார்
உற்சவர்: ஹேமரங்கர், செம்பொன்னரங்கர்
ஆகமம்: பாஞ்சராத்ர ஆகமம்
விமானம்: கனக விமானம்
தீர்த்தம்: ஹேம புஷ்கரிணி, கனக தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

இந்த கோயில் சீர்காழியிலிருந்து 8 கி.மீ.  தொலைவில் உள்ளது (திருநாங்கூர்).

சேவிப்பதன் பலன்கள்:

சகல தோஷம் போக்கும் தலம்.  எந்தவித தோஷம் உடையவர்களும் இங்கு வந்து பெருமாளை சேவித்து தோஷம் போக்கி கொள்ளலாம். 8, 17, 26  தேதிகளில் பிறந்தவர்கள் வந்து தரிசிக்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment