திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -33

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்து மூன்றாம் திருப்பதி...

33. தேவர்கள் குவிந்த திருத்தேவனார் தொகை

தேவர்கள் எல்லாம் தேவகி மைந்தனைத் தேடிய இடம்
வசிஷ்டர் வாசுதேவனைக் கண்ட இடம் - நாம்
தேடியது எல்லாம் தேடியபடி கிடைக்கும் இடம்
மாதவப் பெருமாள் அருளும் திருத்தேவனார் தொகையே!

திருநாங்கூரைச் சூழ்ந்த திவ்ய தேசங்களுள் ஒன்று. பெருமாள்- லட்சுமி திருமணம் காண தேவர்கள் தொகையாக வந்ததால் திருத்தேவனார்தொகை என்று காரணப்பெயர் பெற்றது.

மூலவர்: தெய்வநாயகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கடல்மகள் நாச்சியார், தெய்வநாயகி
உற்சவர்: மாதவப் பெருமாள்
விமானம்: சோபன விமானம்
தீர்த்தம்: சோபன புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

சீர்காழிக்கு தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில், திருநாங்கூர் அருகே  உள்ளது இத்தலம். திருவாலியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கீழச்சாலை மாதவப்பெருமாள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

சேவிப்பதன் பலன்கள்:

திருமண பாக்கியம் அருள்பவர். தொழிலில், வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்கள் வந்து வணங்க வேண்டிய தலமாகும்.  2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க நலம் பெறலாம்.

$$$

Leave a comment