-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தொன்றாம் திருப்பதி...

31. ஸ்வேதகேதுக்கு அருளிய திருவைகுந்த விண்ணகரம்
வில்லுக்கு வீரனாகி, அன்புக்குப் பணிந்து, கஜத்துக்குக் கனிந்து, தாகத்துக்கு அருளி, உள்ளுக்குள் நமோ நாராயணானாகி இல்லுக்கும் புறத்துக்கும் கவசமாகி - அருளும் அமர்ந்தானை வைகுண்டநாதனை அணுகிப் பணிவோமே!
ராமபிரான் அவதரித்த இஷ்வாகு குலத்தில் தோன்றிய மன்னர் ஸ்வேதகேதுவும் அவரது மனைவி தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு, வைகுந்தநாதனின் தரிசனம் வேண்டினர். அவர்களுடன் ஈசனும் உதங்க முனிவரும் சேர்ந்து பெருமாளின் தரிசனம் வேண்ட, இத்தலத்தில் வைகுந்தநாதனாக காட்சி அளித்தார் பெருமாள் என்கிறது, தலபுராணம். திருநாங்கூரில் உள்ள 11 திவ்யதேசங்களுள் இது இரண்டாவது தலம்…
மூலவர்: வைகுந்தநாதன் (அமர்ந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: வைகுந்தவல்லி
விமானம்: அனந்தஸ்த்யவர்த்தக விமானம்
தீர்த்தம்: லஷ்மி புஷ்கரிணி, உதங்க புஷ்கரிணி, விரஜா.
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
எப்படிச் செல்வது?
சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
குடும்ப பிரச்னை தீரவும், குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், நோய்கள் தீர்ந்து பெரிய அறுவைச் சிகிச்சைகள் நல்லபடியாக வெற்றி பெறவும், பில்லி சூனியத்தில் இருந்து விடுபடவும், இங்கு வந்து வைகுண்டநாதனை வணங்க நலம் பெறலாம். 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$