திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -25

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்தைந்தாம் திருப்பதி...

25. வராகர் தோன்றிய திருக்கூடலூர்

வையம் காத்த பெருமானே, வராகனே!
ஐயம் போக்கும் கீதையின் ஆச்சாரியனே!
பொய்யும் புரட்டும் நிலவும் உலகில்
உய்யவந்தானே, உலகளந்தானே, காத்தருள்வாயே!

ஹிரண்யாசுரனிடமிருந்து பூமாதேவியை மீட்க, இத்தலத்தில் தான் கோரைப் பற்களால் கிழித்துக்கொண்டு வராக ரூபமாய் உட்புகுந்து ஸ்ரீமுஷ்ணத்தில் வெளிவந்தார் நாராயணன் என்பது புராணம். இங்குள்ல நர்த்தன விநாயகர் புகழ் பெற்றவர். ராணி மங்கம்மாள் இக்கோயிலை புனர் நிர்மாணம் செய்துள்ளார்.

மூலவர்: வையம் காத்த பெருமாள், ஜகத்ரட்சகன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  பத்மாசனி, புஷ்பவல்லி.
ஆகமம்: வைகானஸம்
விமானம்: சுத்தசத்வ விமானம்
தீர்த்தம்: சக்ர தீர்த்தம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.30  மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரை.

எப்படிச் செல்வது?

தஞ்சையிலிருந்து பஸ் மார்க்கமாய் திருவையாறு செல்ல வேண்டும். அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 11 கி.மீ.  தொலைவு சென்று இத்திருத்தலத்தை அடையலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

ஆன்மிகம், ஞானம் போன்றவற்றில் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள், பகவானை நேரில் காண பிரார்தனை செய்து கொண்டிருப்பவர்கள் வந்து சேவிக்க வேண்டிய தலம் இது. 2, 11, 20, 29  தேதிகளில் பிறந்தவர்கள் வந்து சேவிக்க மன நிம்மதி பெறலாம்.

$$$

Leave a comment