திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -24

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்து நான்காம் திருப்பதி...

24. திருமங்கை வேல் வாங்கிய திருக்காழிச் சீராம விண்ணகரம்

அன்னையரில் யார் சிறப்பு – ஐயனே!
கோசலையோ கொஞ்சி இருந்தாள்!
தேவகியோ அஞ்சிக் கொடுத்தாள்!
யசோதா போல் யார் உள்ளார்?
வெண்ணெய் தின்ற வாயில் முத்தம் பெற்றால்
வெள்ளி கிண்கிணி ஓசை கேட்டாள்!
உலகை அளந்தவனை தவழ்ந்து பார்த்தாள்!
உக்ரஸ்தம்பத்தில் வந்தவனை உரலில் கட்டினாள்!
உச்சிமோந்தாள், உருட்டி மிரட்டினாள்!
பிச்சியைப்போல் கண்ணனையே நினைத்தாள்!
அச்சச்சோ திருகாழிச் சீராமா!
அன்னை யசோதா தாய்க்காக – நீயே
அடுத்த அவதாரத்துக்காக காத்து நின்றாயே!

திருமங்கையாழ்வாருடன் சீர்காழி மைந்தன் திருஞானசம்பந்தர் வாதப்போர் செய்த இடம். சம்பந்தருடன் வாதம் புரிந்து, வேலும் தண்டையும் அவரிடமே பெற்றார் திருமங்கையாழ்வார். சீர்காழியில் இருக்கும் திவ்ய தேசம் இது. தன் திருவடியால் மூவுலகையும் அளந்தவர் என்பதால் இத்தலத்துப் பெருமாளுக்கு  ‘தாடாளன்’ என்று பெயர் சூட்டினார் ஆண்டாள் நாச்சியார்.

மூலவர்: தாடாளன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  லோகநாயகி
உற்சவர்: திரிவிக்கிரமன், மட்டவிழ் குழலி
ஆகமம்: வைகானஸம்
விமானம்: புஷ்கலாவர்த்த விமானம்
தீர்த்தம்: சங்க புஷ்லரிணி, சக்ர தீர்த்தம்
தல விருட்சம்: பலா
மங்களா சாசனம்: ஆண்டாள், திருமங்கையாழ்வார். மனவாள மாமுனிவரும் பாடியுள்ளார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை

எப்படிச் செல்வது?

சீர்காழி நகரின் மையத்தில் உள்ளது இத்தலம்.

சேவிப்பதன் பலன்கள்:

உயர் அதிகாரிகளால் பாடாய்ப் படுபவர்கள், புது வியாபாரம் ஆரம்பிக்க வேண்டியவர்கள் வர வேண்டிய தலம் இது.  2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய ஆலயம்.

$$$

Leave a comment