திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -23

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இருபத்துமூன்றாம் திருப்பதி...

23. சிவனுடன் பெருமாள் உறையும் திருச்சித்திரகூடம்

கூத்தனின் நாட்டியத்தில் லயித்துக் கிடந்தவனே!
அஞ்சனை மைந்தனின் ஆத்மாவில் இருப்பவனே!
ஆஞ்சநேயனின் ராமநாமத்தில் வசிப்பவனே!
கோவிந்தராஜனே உனை சரணம் என சரணடைந்தேனே!

சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருக்கோயில். சிதம்பரம் நடராஜர் சன்னிதி அருகிலேயே கோவிந்தராஜரின் சன்னிதியும் அமைந்திருப்பது சிறப்பு. தேவதச்சன் விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டதாக தல வரலாறு கூறும் ஆலயம். சிவனும் சக்தியும் நடனத்தில் யார் சிறந்தவர் என்ற போட்டியில் நாராயணன் முன் நர்த்தனமாடிய திருத்தலம் இது. பெருமாள் சன்னிதி முன்னின்று பார்த்தால், நடராஜர், கோவிந்தராஜர், பெருமாள் அருகிலேயே நிற்கும் பிரமன் ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.

மூலவர்: கோவிந்தராஜப் பெருமாள் (போக சயனக் கோலம்- இழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  புண்டரீகவல்லி
உற்சவர்: தேவாதிராஜன், பார்த்தசாரதி
ஆகமம்: வைகானஸம்
விமானம்: ஸாத்விக விமானம்
தீர்த்தம்: புண்டரீக புஷ்கரிணி
மங்களா சாசனம்: குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை

எப்படிச் செல்வது?

பஞ்சபூதத் தலங்களுள் ஆகாயத் தலமான சிதம்பரமே திருச்சித்திரகூடம் ஆகும்.  புகழ்பெற்ற நடராஜர் கோயிலுக்குள் இந்த வைணவக் கோயில் அமைந்துள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

கலைத்துறையில் பிரகாசிக்க நினைப்பவர்களும், வியாரத்தில் சிறக்க நினைப்பவர்களும் வந்து தரிசிக்க வேண்டிய தலம் ஆகும். 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும்.

$$$

Leave a comment