திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -18

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினெட்டாம் திருப்பதி...

18. இரட்டைக் கோயில்கள் கொண்ட திருவாலி – திருநகரி

மழலைக் குழந்தையாய் தவழ்ந்து, வெண்ணெய் திருடி,
மாப்பிள்ளையாய் வந்து மங்கை மன்னன் மனதைடத் திருடி,
முப்பொழுதும் எனைக் காத்து என் உள்ளமும் திருடி,
எப்பொழுதும் காக்கும் திருநகரிப் பெருமாளைப் பணிவோமே!

பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்களில் ஒன்று. பூரண மகரிஷியின் பெண்ணாக அம்ருதவல்லி தாயார் அவதரித்து பெருமாளை திருக்கல்யாணம் செய்த தலம். நரசிம்ம அவதாரத்தின் சீற்ரம் தணிக்க லட்சுமி தேவியை திரு ஆலிங்கனம் செய்த இடம் என்பதால் காரணப்பெயர் பெற்ற தலம். திருவாலி லட்சுமி நரசிம்மர், திருநகரி கல்யாண ரங்கநாதர் ஆகிய இரு பெருமாள்கள் அருளும் இரட்டைக் கோயில்கள் கொண்ட திவ்யதேசம் இது.

திருவாலி லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில்

திருவாலி:
மூலவர்: லக்ஷ்மி நரசிம்மர் (அமர்ந்த கோலம்- மேற்கே திருமுக மண்டலம்)
தாயார்: அம்ருதகடவல்லி
உற்சவர்: திருவாலி நகராளன்
விமானம்: அஷ்டாஷர விமானம்
தீர்த்தம்: லாட்சன தீர்த்தம்
தல விருட்சம்: வில்வம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருநகரி வேதராஜப் பெருமாள் கோயில்


திருநகரி:
மூலவர்: வேதராஜன்
தாயார்: அமிர்தவல்லி
உற்சவர்: கல்யாண ரங்கநாதர்
மங்களா சாசனம்: குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்

இக்கோயிலில், திருஞான சம்பந்தப் பெருமாண் அளித்த வேலுடன் திருமங்கையாழ்வார் காட்சி அளிக்கிறார்,

நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

திருஞானசம்பந்தர் அளித்த வேலுடன் திருமங்கையாழ்வார்

எப்படிச் செல்வது?

சீர்காழியிலிருந்து தென்கிழக்கே 8 கி.மீ. தொலைவில், பூம்புகார் சாலையில்  உள்ளது இத்தலம் (திருநகரி பேருந்து நிறுத்தம்).

சேவிப்பதன் பலன்கள்:

திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவர்கள், கடன் தொல்லையில் வாடுபவர்கள், பில்லி, சூனியம் ஆகியவற்றால் வாடுபவர்கள் வந்து இப்பெருமானைத் தரிசிக்க பிரச்னையிலிருந்து விடுபடலாம். 1, 10, 19, 28  தேதிகளில் பிறந்தவர்களும், 8, 17, 26  தேதிகளில் பிறந்தவர்களும் வந்து தரிசிக்க வேண்டிய தலமாகும்.

$$$

Leave a comment