-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினைந்தாம் திருப்பதி...

15. சிவனின் தோஷம் போக்கிய தலம் திருக்கண்டியூர்
நீலகண்டனின் தோஷம் நீங்கிய ஊர்! கமலகண்ணன் கமலவள்ளியைக் கொண்ட ஊர்! அவலங்கள் அகல பலிபீட நாதனாய் நின்ற ஊர்! கடினங்கள் போக நானும் கண்டியூர் கண்டேன், கருணை புரிவாயே கமலநாதப் பெருமானே!
பிரமனின் தலையைக் கிள்ளியதால் பரமசிவனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக்கிய தலம் இது என்று தல புராணம் கூறுகிறது. பஞ்சகமல ஷேத்திரம் இது.
மூலவர்: ஹரசாப விமோசனப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கமலவல்லி நாச்சியார்.
உறசவர்: கமலநாதர்
விமானம்: கமலாக்ருதி விமானம்
ஆகமம்: வைகானஸம்
தீர்த்தம்: பத்ம தீர்த்தம், குடமுருட்டி நதி, கபால மோட்ச புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
திருக்கண்டியூர் செல்ல டவுன் பஸ் வசதி உள்ளது. தஞ்சையிலிருந்து வடக்கே திருவையாறு செல்லும் பஸ்ஸில் சென்றால் இத்தலம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
பரமசிவனின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய தலம் இதுவாகும். அனைத்து விதமான தோஷம் நீங்க இத்தலப் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சார்த்தி வழிபட தோஷம் நீங்கும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வழிபட வேண்டிய தலம் இது.
$$$