-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதின்மூன்றாம் திருப்பதி...

13. சந்திரனின் சாபம் போக்கிய திருத்தலைச்சங்க நாண்மதியம்
பூவின் மணமும் கனியின் சுவையும் கொண்டவனே, தாயின் மடியில் தவழ்ந்த போதே உலகை காட்டி சிரித்தவனே! ஆவின் கூட்டம் மறைந்தபோது மாயம் செய்து காத்தவனே, மாயன் கூத்தன் சங்கை தலைச்சங்காட்டில் பெற்றவனே! அடியேன் நானும் வந்தேன் அருள்புரிந்து காப்பாயே!
சந்திரன் தனது குரு சாபம் நீங்க இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பெருமாளின் அருள் பெற்றார். பசுமையான வயல்வெளியில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர்: நாண்மதியப் பெருமாள் (நின்ற கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: தலைச்சங்க நாச்சியார்
உற்சவர்: வெண்சுடர்ப் பெருமாள்- செங்கமலவல்லி தாயார்
விமானம்: சந்திர விமானம்
தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?
மாயவரத்திலிருந்து வடக்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். மாயவரம்- ஆக்கூர்- சீர்காழி சாலையில் ஆக்கூரிலி இருந்து 3 கி.மீ. தொலைவில் தலைச்சங்காடு பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
நினைத்தை அடையவும், புதிய வியாபாரம் வெற்றி பெறவும், தோஷம் நீங்கவும் இங்கு வந்து இப்பெருமாளை வேண்ட நலம் பெலாம். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$