-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினொன்றாம் திருப்பதி...

11. புலிக்கால் முனிவருக்கு மோட்சம் அளித்த திருச்சிறுப்புலியூர்
காளிங்கனுக்கு கனிந்தவனும், ஆதிசேஷனைக் காத்தவனும், சோளிங்கரில் அமர்ந்தவனும், காலங்கள் கடந்தவனும், கோலங்கள் கொண்டவனும், மாயங்கள் புரிபவனுமான அருள்மா கடலமுதனை அணுகி பணிவோமே!
சிவ பெருமானின் வழிகாட்டலில், இங்கு வந்த புலி போன்ற பாதங்களையுடைய வ்யாக்தபாத ரிஷிக்கு பாலக வடிவில் சயனக் கோலத்தில் தரிசனம் தந்து மோட்சம் அளித்த பெருமாள் என்பதால் ‘திருச்சிறுபுலியூர்’ என்று காரணப்பெயர் பெற்ற தலம் இது. திருவரங்கத்தில் பெரிய வடிவில் சயனித்திருக்கும் பெருமாள், இங்கு சிறிய (பால) வடிவில் சயனித்திருப்பது சிறப்பு. வியாக்பாதர், ஆதிசேஷன், கன்வ மகரிஷி ஆகியோருக்கு பெருமாள் அருளிய தலம் இது…
மூலவர்: அருள்மாகடலமுதன் (பாலசயனம்- தெற்கே திருமுக மண்டலம்)
தாயார்: திருமாமகள் நாச்சியார்
உற்சவர்: க்ருபாஸமுத்ரன், தயாநாயகி
விமானம்: நந்தவர்த்தன விமானம்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
தீர்த்தம்: மானஸ புஷ்கரிணி, அனந்தசரஸ்
தல விருட்சம்: வில்வம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
மாயவரம் – அறந்தாங்கி மார்க்கத்தில், கொல்லுமாங்குடி ஊரில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
நாக தோஷம் உள்ளவர்களும், குழந்தை இல்லாதவர்களும் வந்து பிரார்த்தனை செய்ய நலம் பெறலாம். 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் இங்கு வந்து தரிசிக்க வளம் பெறலாம்.
$$$