-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஒன்பதாம் திருப்பதி...

9. காமதேனு தவம் புரிந்த திருஆதனூர்
உறிஅடித்தான் உலகை அளந்தான், மண்ணைத் தின்றான், மலையைக் கொண்டான், கல்லானான், கதம்ப மரமானான். எல்லாமும் ஆனான் எம்பெருமான் – ஆதனூர் வந்து படியும் அளந்து கிடந்தானே!
காமதேனு நற்கதி அடைய தவம் புரிந்த தலம் இது. அக்கினி பகவானின் சாபம் நீக்கிய தலமும் இதுவே. திருவரங்கத்தில் மதில் எழுப்பக் கடன்பட்ட திருமங்கையாழ்வாருக்கு செல்வம் அளிக்க வணிக வேடத்தில் வந்த பெருமாள் இவர்; ஆழ்வாருக்கு ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டு, மரக்காலில் அளந்துகொடுத்த ஐயன் இவர். கருவறையில் மரக்காலை தலைக்கு வைத்து, கரங்களில் ஓலைச்சுவடி, எழுத்தாணியுடன் காட்சி தருகிறார் மூலவரான படியளக்கும் பெருமாள்.
மூலவர்: ஆண்டளக்கும் ஐயன் (புஜங்க சயன திருக்கோலம்)
தாயார்: ஸ்ரீரங்கநாயகி
விமானம்: பிரணவாகார விமானம்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
தீர்த்தம்: சூரிய புஷ்கரிணி
தல விருட்சம்: பாடலி மரம்.
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்.

திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை.
எப்படிச் செல்வது?
சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
அக்கினியால் எந்தவித ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், . விபத்து இல்லாத வாழ்க்கை வாழவும், மின்சாரத்தால் எந்த பாதிப்பும் வராமல் இருக்கவும், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் நீங்கவும், திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கவும் இங்கு வந்து பெருமாளுக்கு நெய் விளக்கு ஏற்றி, தாயாருக்கு புடவை சார்த்தி வழிபட நலம் உண்டாகும். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும், 13ஆம் தேதியில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய தலம்.
$$$
One thought on “திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -9”