திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -8

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது எட்டாம் திருப்பதி...

8.  உபமன்யுவின் சாபம் போக்கிய திருப்பேர் நகர்

அப்பால ரங்கநாதனே அப்பக்குடத்தானே,
எப்பால் நான் செல்வேன் உன் அருள் பார்வையில்லாமல்
முலைப்பால் குடித்து முன்காலைத் தூக்கி முழுச்சூரியன் மறைத்து
மூவுலகத்தையும் காப்பவனே என்னையும் காத்துருள்வாயே!

உபமன்யு என்னும் அரசனின் சாபம் போக்க அவனிடம் பெருமாள் அப்பக்குடம் பெற்ற தலம் இது. பஞ்சரங்கத் தலங்களில் இது இரண்டாவது தலமும் கூட. கோவிலடி என்ற தற்போதைய பெயரில் உள்ள தலம்.

மூலவர்: அப்பக்குடத்தான்; அப்பால ரங்கநாதன் (புஜங்க சயனம்)
தாயார்:  இந்திராதேவி, கமலவல்லி.
ஆகமம்: பஞ்சாராத்ர ஆகமம்
விமானம்: இந்திர விமானம்
தீர்த்தம்: இந்திர தீர்த்தம்
மங்களா சாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

அன்பிலில் இருந்து கொள்ளிடத்துக்கு அக்கரையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். தோஹர் – திருக்காட்டுப்பள்ளி – தஞ்சை பஸ்ஸில் வரலாம். கோவிலடி என்று சொல்ல வேண்டும்.   திருப்பேர் நகர் என்றால் அனைவருக்கும் தெரியாது.

சேவிப்பதன் பலன்கள்:

இத்தலத்திற்கு வந்து பெருமாளுக்கும் அப்பம் நைவேத்தியம் செய்து வணங்கினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத்தடை நீங்கும் தலமாகும். 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து பலன் அடைய வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment