-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஏழாம் திருப்பதி...

7. ஜடாயுவிற்கு மோட்சம் அளித்த திருபுள்ளம் பூதங்குடி
கல்லுக்கு இரங்கி கனியிலும் கனிந்து அன்பே உருவாகி வில்லுக்கு இராமனாகி வீரம் விளைவித்தது எல்லாம் சொல்லுக்கு இடமாகி ஜடாயு போனதாலே கல்லுக்கு நிகராக இராமன் கிடந்த இடம் திருபுள்ளம் பூதங்குடியே!
ராமாயணத்தில் வரும் பறவை அரசனான ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் ஈமக்கிரியை செய்த தலம் திருப்புள்ளம்பூதக்குடி. இக்கோயிலில் சயனக்கோலத்தில் ராமபிரான் காட்சி அளிப்பது சிறப்பு.
மூலவர்: வல்வில் ராமன் (சயனக் கோலம்)
தாயார்: பொற்றாமறையாள்
விமானம்: சோபன விமானம்
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம், க்ருத்ர புஷ்கரிணி
தல விருட்சம்: புன்னை மரம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடைதிறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை.
எப்படிச் செல்வது?
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவன் பஸ் பாதையில் சுவாமி மலைக்கு அப்பால் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
இத்தலத்திற்கு வந்து ஸ்ரீராமனுக்கு அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்தியம் செய்து உண்டு தொடர்ந்து மூன்று நாட்கள் தரிசனம் செய்து வந்தால், பணம், புகழ் தடைப்பட்ட நியாயம் எல்லாம் கிடைக்கப் பெறலாம். புதனுக்குரிய பரிகாரத் தலம். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்தால் மிகுந்த நன்மை அடையலாம்.
$$$