-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நான்காம் திருப்பதி...

4. மண்டூகருக்கு அருள் புரிந்த திரு அன்பில்
பரமனுக்கு விமோசனம் பகிர்ந்தவனே, பரந்தாமனே! அழகனே அமுதனே அன்பில் சுந்தர்ராஜப் பெருமானே! மண்டூக ரிஷிக்கு பிரதட்சயமானவனே! சுந்தரவல்லிக்குப் பிரியனே - நீ மனநோய் பிடித்த என்னையும் காத்து அருள்வாயே!
மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த தலம் திருஅன்பில்.
மூலவர்: வடிவழகிய நம்பி (புஜங்க சயனம்)
தாயார்: அழகியவல்லி நாச்சியார்
உற்சவர்: சுந்தரராஜர்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: தாரக விமானம்
தீர்த்தம்: மண்டூக புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமழிசையாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.30 வரை
பிற்பகல் 4.00 மணி முதல் 8.00 மணி வரை.
எப்படிச் செல்வது?
இந்தத் திருத்தலம் திருச்சி கல்லணை – கும்பகோணம் மார்க்கத்தில் இருக்கிறது. லால்குடிக்கு கிழக்கே 8 கி.மீ. தொலைவில் நடராஜபுரம் வழியாக சென்றும் நம்பெருமாளைத் தரிசிக்கலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கவும், வியாபரத்தில் சிறக்கவும் வணங்க வேண்டிய கோயில் இது. 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வர வாழ்வில் உயர்வு அடைவார்கள்.
$$$