சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி. அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….