இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் தமிழகத்தில் முதன்மை வகித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதியார் ஆகியோர் காலத்தில் வ.உ.சி. அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி, சிறை சென்று, தொழுநோயுடன் வெளிவந்து, அந்த நிலையிலும் கடைசி மூச்சு வரை தேசத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மகான் சுப்ரமணிய சிவா.