நந்தனார் சரிதம் – 5

அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற  பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை!  உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!