குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3ஆ

நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின்  பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.