அயோத்தியாயணம்- 7

-ச.சண்முகநாதன்

7. ராமவேகம்!

அவசரமாகத் திறக்கப்படுகிறது ராமர் கோயில் என்று சிலர்  கூனிமொழி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ராமர் கோயில் வரக் கூடாது என்பதுதான் முதல்  குறிக்கோள். அது மோடியின் தலைமையில் வரக் கூடாது என்பது அடுத்த குறிக்கோள்.  போகட்டும்.

ராமனின் வாழ்வில் அனைத்தும்  அவசரமாகத்தான் நிகழ்ந்திருக்கிறது.

காதல் முதல் கல்யாணம் வரை, அரியாசனம் முதல் வனவாசம் வரை, அயோத்தி  திரும்புதல் முதல் அரியணை ஏறுவது வரை, எல்லாமே அவனது வில்லின் வேகம் போல, எல்லாமே அதிவேகம்.

ஒருநாள் தசரதன் தன்  காதின் ஓரத்தில் நரை தோன்றக் கண்டான்  (“மின்னெனக் கருமைபோய் வெளுத்ததோர்மயிர்”). மின்னல் வேகத்தில், இனி தாமதிக்கலாகாது, ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

“ஆதலாலி ராமனுக்கு அரசை நல்கியிப்
பேதைமை தாய் வரும் பிறப்பை நீக்குவான்”

-என்ற முடிவு மின்னல் வேகத்தில் எடுத்த முடிவுதான். 

ஜோதிட வல்லுநர்களை அழைத்து, ராமனுக்கு முடிசூட்டிட நல்ல நாள் எதுவென்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டான் தசரதன்.  ” “பொருந்தும் நாள் நாளை உன் புதல்வர்க்கு” என்று  கணிதமாக்கள் கூறுவதும், மின்னல் வேகத்தில் நடந்ததுதான். நாளையே பட்டாபிஷேகம் ராமனுக்கு. 

நாளையே! துரிதகதி.

கணிதமாக்கள்  கணித்தது பொய்யா, தெரியவில்லை. பட்டாபிஷேபிகம் நடக்கவில்லை; சதியால் வனவாசம் புக வேண்டும். அதுவும் துரிதகதி. கொடிய வரம் வழங்கப்பட்டபின் அப்பொழுதே வனம் போகிறான். No time buying. No bail.

“இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்".

இன்றே போகிறேன்!

இன்றே போகிறேன் என்று சொல்லி அப்பொழுதே கிளம்பியவன் ராமன். எல்லாமே துரிதகதி ராமன் வாழ்வில்.

யுத்தம் முடிந்து, வென்றாகிவிட்டது. சீதையை மீட்டாகிவிட்டது. 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்ததா, ராமனால்? இல்லை.

தேவர்கள் வந்து  “ராமா. 14 ஆண்டுகள் முடிந்து விட்டது. நீ அயோத்தியா செல்லவில்லையென்றால் அங்கே பரதன் தீக்குளித்து விடுவான். நீ உடனே அயோத்திக்குச் செல்ல வேண்டும்” என்று அவசரப்படுத்தினர்.

“இன்று சென்று, நீ பரதனை எய்திலை என்னின்,
பொன்றுமால் அவன் எரியிடை; அன்னது போக்க,
வென்றி வீர! போதியால்”

“அவசரமாக அயோதிக்குச் செல்ல வேண்டும். இன்றோடு 14 ஆண்டுகள் முடிகிறதென்றால், நான் அயோதிக்குச் செல்லவில்லையென்றால், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற  முடியாமல் போனால், பரதன் தீயில் புகுவானே! நான் உடனே செல்ல வேண்டும். What is the fastest way to reach?” – ராமன் 

“ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும் அயின்,
மாண்டதாம் இனி என் குலம், பரதனே மாயின்;
ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ ?” 

எல்லாமே துரிதகதி அவன் வாழ்வில். 

ராமன் அயோத்தி சேர்ந்தாயிற்று. அனைவரும் மகிழ்ச்சிக்கடலில் திளைக்கும் நேரத்தில் “இனி பட்டாபிஷேகம் செய்யலாம் ராமனுக்கு” என்றெண்ணி நாள் குறிக்கத் தொடங்குகின்றனர். இந்த முறை வஷிஷ்டனே நாள் குறிக்கிறான். 

வஷிஷ்டனும் “நாளையே நல்ல நாள் ராமனுக்கு முடிசூட்ட” என்று கணிக்கிறான். நெடுங்காலம் கரிய செம்மல் ராமன் அரசாளப் பொருத்தமான நாள் நாளை என்று “நாளையே  நல்ல நாள்” என்று மறுபடியும் ஒரு அவசரமான timeline ராமனுக்கு.

“...ஊழிக்காலம் 
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்புநாள் நாளையென்றான்”

நன்றாகக் கவனித்தால் ராமனுக்கு எல்லாமே துரித கதியில் நடந்தவை தான்.

ராமன் வாழ்வில் நடந்தவை எல்லாம் அவனது அம்பின் வேகத்தைப் போல, மின்னல் வேகம் தான். எங்கள் ராமன் கோயில் ‘அவசரமாக’த் திறக்கப்படுகிறதென்றால் அதுவும் in line with what happened in his life.

$$$

Leave a comment