“நிலமகளின் விலாசம் அயோத்தியோ” என்று ஆரம்பத்திலேயே அயோத்தியின் பெருமையை வானில் வைக்கிறான் கம்பன். பூமியின் திலகமோ? பூமியின் கண்ணோ? மங்கல சூத்திரமோ? நிலமகளின் மார்பில் அணிந்த இரத்தின மாலையோ? நிலமகளின் உயிரின் இருக்கையோ? லட்சுமி வசிக்கும் தாமரையோ? திருமால் மார்பில் அணிந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட பெட்டியோ? தேவலோகத்திற்கும் மேலான இடமோ? இல்லை ஊழிக்காலத்தில் எல்லாமும் தங்கும் திருமாலின் வயிறோ?”