-சேக்கிழான்
குடியுரிமை திருத்த சட்டம்-2019 குறித்த தவறான பிரசாரங்களை முறியடிக்கும் விதமாக, எழுத்தாளர் திரு. சேக்கிழான் எழுதிய நூல், ‘குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்’. விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்நூலின் பகுதிகள் இங்கே தொடராக வெளியாகின்றன...

பதிப்புரை
தற்போது தேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 தொடர்பான விவாதங்கள் ஒருபுறமும், தவறான பிரசாரம் மறுபுறமும் நிகழ்ந்து வருகின்றன. அகதிகளுக்கு வழங்கப்படும் விசேஷ குடியுரிமைக்கும், இந்த நாட்டில் வாழும் குடிமக்களின் இயல்பான குடியுரிமைக்கும் வேறுபாடு தெரியாத சிலர் நாட்டில் பொய்ப் பிரசாரம் மூலமாக அமைதியைக் கெடுத்து வருகிறார்கள்.
சில சுயநல அரசியல்வாதிகளோ, இந்தச் சட்டம் தொடர்பான முழு விவரங்களையும் அறிந்திருந்தபோதும், தவறான விளக்கம் அளித்து, இஸ்லாமிய மக்களைத் தூண்டிவிட்டுஅவர்களை வன்முறைப் பாதைக்கு மடைமாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தேசநலன் விழைவோர் நாட்டில் நிலவும் குழப்பத்தைப் போக்கத் துடிக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சிறு கையேடாக இந்த நூலை வெளியிடுகிறோம்.
தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளரும் பத்திரிகையாளருமான திரு. சேக்கிழான் இந்த நூலை எழுதி இருக்கிறார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்புலமும் அவசியமும் குறித்து விளக்கும் இந்த நூல், சட்ட விதிமுறைகளின் பாரபட்சமற்ற தன்மையை தெளிவாகக் கூறி, அகதிகளின் நல்வாழ்வுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையையும் நினைவுபடுத்துகிறது.
விதியின் கொடுமையால், தேசப் பிரிவினையாலும் மதவெறியாலும் பாதிக்கப்பட்டு வாழ்வை இழந்து தவிக்கும் லட்சக் கணக்கான இந்திய வம்சாவளியைச் சார்ந்த அகதிகளுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
-பதிப்பாளர்
(2020)
$$$
உள்ளடக்கம்…
1. குடியுரிமைத் திருத்தச் சட்டம் – யாருக்கானது?
2. திட்டமிட்ட வன்முறைகளும் மக்களின் மௌனமும்…
3. கேள்வி – பதில் வடிவில் சில தகவல்கள்: (பகுதி-அ), (பகுதி-ஆ)
4. குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டப்பூர்வமானது
5. நேரு- லியாகத் அலிகான் ஒப்பந்தம் சொல்வது என்ன?
6. நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்
7. காற்றில் பறக்கலாமா தலைவர்களின் உறுதிமொழி?
(தொடர்கிறது)
$$$
2 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்”