அரவிந்தரைப் பெரிதும் ஆன்மிகவாதியாக மட்டுமே பலரும் அறிந்துள்ளார்கள். பாரதியைப் பெரிதும் இலக்கியவாதியாக மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ரீஅரவிந்தருக்கு இணையான ஆன்மிகவாதி மகாகவி பாரதி என்பதை பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகளும் அவரது கவிதைகளும் நமக்கு உணர்த்துகின்றன.