''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப் போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை”....