நவராத்திரி – 1

இருளும் ஒளியும் மாறி மாறி வருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளி உண்டு; மேகங்கள் வந்து சூர்யனை மறைத்தாலொழிய; சில சமயங்களில் கிரஹணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும், மறைவுகளும் அதிகப்படுகின்றன; பகல் தெளிந்த அறிவு; இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு, இரவாவது தூக்கம். மஹாளய அமாவாசை ஒழிந்து போய்விட்டது.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: பதிப்புரையும் அணிந்துரையும்

நமது தளத்தில் வெளியான ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக உள்ளது. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரை, அணிந்துரைகள் இங்கே...