இனி

கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.

என்றும் வாழும் சநாதன தர்மம்- பதிப்புரையும் முன்னுரையும்

நமது தளத்தில் ‘சநாதனம்’ குறித்து தொடராக (வாழும் சனாதனம்)  வெளியான அறிஞர்கள் பலரது கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட 37 கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரையும், முன்னுரையும் இங்கே…