புனர்ஜன்மம் (1)

காலம் மாறமாற,பாஷை மாறிக்கொண்டு போகிறது; பழைய பதங்கள் மாறிப் புதியபதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை.