வாழும் சனாதனம்!- 1

-பி.ஆர்.மகாதேவன்

“ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ?” என்று கேட்பார் மகாகவி பாரதி. “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் சூரியனுக்கு எந்தக் கெடுதியும் இல்லை” என்பது பழமொழி. அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டபோது, இந்த இரண்டும் தான் நினைவுக்கு வந்தன. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடங்குகின்றன...  

1. ஆம் நாங்கள் சனாதனிகள்தான்!

(கவிதை)

ஆம் நாங்கள் சனாதனிகள்தான்!

துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்
சங்கத் தமிழ் மூன்றையும் கேட்ட
ஔவைப் பிராட்டியின் வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

பரமனின் பனிபடர் நெடுவரையை
வட எல்லையாகக் கொண்ட சனாதனிகள் நாங்கள்!

அவன் உடுக்கையில் இருந்து பிறந்த
ஆதிமொழிகளின் வாரிசுகள் நாங்கள்!

திருமால் சீர் கேளாத செவிகள் செவியல்ல என்ற
சிலம்புத் தமிழன் வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

குன்றுதோறாடும் குமரனுக்குக்
காவடி எடுத்து ஆடும் சனாதனிகள் நாங்கள்!

புற்றுறை நாகத்தையும்
வேம்புறை அம்மனையும்
வானுறை சூரியனையும்
விண்ணுறை கிரகங்களையும்
விழுந்து கும்பிடும் சனாதனிகள் நாங்கள்!

ரத்தபலி கேட்கும்
எல்லைத் தெய்வங்களையும்
ஊர் காக்கும் அய்யனார்களையும்
நோய் தீர்க்கும் மகா மாயிகளையும்
மகசூல் பெருக்கும் இயற்கையையும்
கை கூப்பித்தொழும் சனாதனிகள் நாங்கள்!

குருக்ஷேத்திரப் படைகளுக்கு உணவளித்த
பெருஞ்சோற்று உதயன் சேரலாதனின்
பெருமை மிகு வாரிசுகள் நாங்கள்!

வேள்விகள் வளர்த்து வேத மறை காத்த
பல்யாக சாலைப் பெருங்குடுமியின்
வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

ஆராய்ச்சி மணி அடித்து அநீதியைத் தட்டிக்கேட்ட
அப்பாவிப் பசுவுக்கு
மனு நீதி வழங்கிய சோழனின்
வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

தீதும் நன்றும் பிறர் தரவாரா என்று
தீந்தமிழில் கர்ம வினைப் பலன் பேசிய
கவி மரபில் வந்த சனாதனிகள் நாங்கள்!

ஆன்றகுடிப் பிறப்பின் அருமைகள் போதித்த
தெய்வப் புலவனின்
திருவடி போற்றும் சனாதனிகள் நாங்கள்!

உங்களைப் போல்
கள்ளப் போதகன்களின்
உள் பாவாடை நாடா அல்ல நாங்கள்!

இல்லாத இனத்தின்
பொல்லாத மூடனின்
மூத்திரச்சட்டியிலிருந்து தெறித்த துளிகள் அல்ல நாங்கள்!

அந்நிய தேசத்தின்
இரவல் குரலில் குலுங்கும் உண்டியல்களின்
துருப்பிடித்த தகரம் அல்ல நாங்கள்!

வந்தேறி மொகல்களைப் பந்தாடிய
சத்திரபதியின் வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

அலிகளை விரட்டியடித்து
ஆலயங்கள் அமைத்த நாயக்கர்களின்
வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

சாத்தானின் பிள்ளைகள் அல்ல,
சதுர்வேதி மங்கலங்கள் உருவாக்கி
சதுர் மறைகள் காத்த
சிவபாத சேகரனின் வழி வந்த சனாதனிகள் நாங்கள்!

காவியே எங்கள் கொடி!
தர்மமே எங்கள் வழி!

ஆதி மொழிகளே எங்கள் மொழிகள்!
பூவுலகின் புண்ணிய பூமியே எங்கள் தேசம்!

உலக நன்மையே எங்கள் இலக்கு!
விஸ்வ குருவே எங்கள் பீடம்!

தர்ம பூமிகள் யாதும் எங்கள் ஊரே!
தர்மவான்கள் யாவரும் எங்கள் கேளிரே!

ஜெய் ஹிந்த்..!

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

Leave a comment