எட்டுத்தொகை நூல்களில் அகப்பாடல்கள் கொண்ட ஐந்து நூல்களில் (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு) பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகளைக் காணலாம்…
Day: June 10, 2023
அகமும் புறமும் – 8 (ஆ)
கல் தோன்றி மண் தோன்றாத காலத்தே தோன்றினர் தமிழர்; பிற நாட்டார் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றினர் இம்மண்ணில். அந்நாட்டார்கள் சாதாரண நாகரிகம் அடையு முன்னரே தமிழர் மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டனர். இவர் பேசும் மொழியும் இவரைப் போல் தொன்மை வாய்ந்தது; எனவே, இவருடைய வாழ்வும் பண்பாடும், எண்ணமும், கருத்தும் மிகு பழமையானவை. புற உலக வாழ்க்கைக்குத் தேவையான அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கிய நம் முன்னோர் அகஉலக வாழ்க்கையிலும் (சமய வாழ்க்கை) சிறந்து விளங்கினர் என்பது சொல்லாமலே விளங்கும்.