இந்திய விடுதலைக்கு உழைத்த தியாகியரில் திலகம் போன்றவர் வீர சாவர்க்கர் எனபடும் விநாயக தாமோதர சாவர்க்கர். மராட்டியரான இவரே அரசியலில் ஹிந்துத்துவம் என்ற சித்தாந்தம் உருவாக அடித்தளமிட்டவர். அதன் காரணமாகவே இன்று பலராலும் அர்த்தமின்றி விமர்சிக்கப்படுபவர். ஆனால், பலரும் அறியாத அவரது இன்னொரு முகம், இவர் ஒரு அதிதீவிர சமூகச் சீர்திருத்தவாதி என்பதே. அதைப் பற்றி, திருநின்றவூர் ரவிகுமார் எழுதியுள்ள இக்கட்டுரை, ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமான விஷயங்களுடன் நம்முடன் உரையாடுகிறது...