தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை

...எல்லா தேசங்களிலும் பெண்கள் மேன்மேலும் சுதந்திரம் பெற்று மனித ஜாதியை மேன்மைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.  தமிழ்நாட்டு ஸ்திரீகள் மாத்திரம் தமது மனுஷ்ய பதவியை ருசுப்படுத்துவதற்கு யாதொரு வழியும் செய்யாமல் இருக்கிறார்களே! ஏன்? என்ன காரணம்?

நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்

...நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும்....

பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்

பெண்ணுரிமைக்கான கூட்டம் நிகழ்வதையும் கூட செய்தியாக்கி மகிழும் இதழாளர் பாரதியை இங்கே நாம் தரிசிக்கிறோம். அது மட்டுமல்ல, தனது புதல்வி தங்கம்மாளைக் கொண்டு, சீனப் பெண் புரட்சியாளர் (சியூ சீன்) தொடர்பாக வெளிநாட்டுப் பத்திரிகையில் வெளியான விவரத்தை தமிழாக்கிப் படிக்க வைத்திருக்கும் பாரதியின் தீவிர உணர்வு கவனித்தற்பாலது. மேலும், சியூ சீன் எழுதிய புரட்சிக் கவிதையைத் தமிழாக்கி தனது புதல்வியையே வாசிக்கச் செய்திருப்பது, அவரது பெண்ணுரிமை தாகத்தைக் காட்டுகிறது....

தமிழ்நாட்டு நாகரீகம்

...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....

தமிழ்நாட்டு மாதருக்கு

குடும்ப வழக்கங்களாயினும் தேச வழக்கங்களாயினும் ஜாதி வழக்கங்களாயினும் அவற்றுள் முக்கியத்தன்மையுடையன எவை, இல்லாதனவை எவை என்ற ஞானம் நம்முடைய ஸ்திரீகளுக்கு ஏற்பட வேண்டுமாயின், அதற்குக் கல்வியைத் தவிர வேறு ஸாதனமில்லை. ஆண்களுக்கு ஸமானமான கல்வித் திறமை பெண்களுக்குப் பொதுப்படையாக ஏற்படும் வரை, ஆண் மக்கள் பெண்மக்களைத் தக்கபடி மதிக்க மாட்டார்கள்;  தாழ்வாகவே நடத்துவார்கள். தமிழ்நாட்டு ஸஹோதரிகளே! கணவன்மார், உடன் பிறந்தார், புத்திரர் முதலியவர்களால் நன்கு மதிக்கப்பெறாமல் இழிவாகக் கருதப்பட்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும் இறந்து விடுதல் நன்று.

பெண் விடுதலைக்கு தமிழ்ப் பெண்கள் செய்யத் தக்கது யாது?

புதுச்சேரியில் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியின் குமாரி ஸ்ரீ தங்கம்மாவால் ஒரு பெண்கள் கூட்டத்தில் படிக்கப் பெற்ற கட்டுரை இது...

பெண் விடுதலை- 2

நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.

பெண் விடுதலை- 1

இதைக் கேட்டவுடன் ராமராயர்,  “நான் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்” என்று சொல்லி எழுந்து நின்றார். நான் இரண்டு கட்சியையும் சமாதானம் பண்ணிக் கடைசியாக வேதவல்லியம்மை பொதுப்படையாக ஆண் பிள்ளைகளை எவ்வளவு கண்டித்துப் பேசியபோதிலும் ராமராயரைச் சுட்டிக் காட்டி ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டோம்.

பெண்

''ஹிந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப் போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரஸங்கங்களும், கதைகளும், காலக்ஷேபங்களும் நடத்தும் ஹிந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சமையல் வேலைக்குப் போக வேண்டியவர்கள். அதை விட்டு உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இதுபெரிய தொல்லை, உபத்திரவம், தொந்திரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழுமூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை”....

ரெயில்வே ஸ்தானம் – சிறுகதையும் மறுப்பும்

மகாகவி பாரதி, தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில், ‘சுதேசமித்திரன்’ இதழில் சமகால உலகம், அரசியல், சமயம், பண்பாடு தொடர்பான கட்டுரைகள், கவிதைகள், நையாண்டிக் கதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார். அந்த வகையில்  ‘சுதேசமித்திரன்’ (22-5-1920) இதழில் அவர் எழுதிய கதை, ‘ரெயில்வே ஸ்தானம்’. இஸ்லாமிய மக்களிடையே உள்ள பலதார மணத்தை விமர்சிக்கும் வகையிலும்,  முஸ்லிம் மாதரின் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதாகவும் இக்கதையை எழுதியுள்ளார் பாரதி. எனினும், இக்கதையில் சிறு தகவல் பிழை இருப்பதாக அவரது இஸ்லாமிய நண்பர் கூறியதையும் ‘சுதேசமித்திரன்’ இதழில்  'முகமதிய ஸ்திரீகளின் நிலைமை' என்ற கட்டுரையாக வெளியிட்டு, தனது பிழைக்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார். என்றபோதும், முஸ்லிம் மாதரின் உரிமைக்காக தனது இஸ்லாமிய நண்பரிடம் தொடர்ந்து வாதிடுகிறார். சமூக மாற்றத்துக்காகத் துடித்த மகாகவி பாரதியின் இதயம், மதம் கடந்து சிந்தித்ததையும் இந்த சிறுகதை மற்றும் கட்டுரையில் காண முடிகிறது. 

தமிழ்நாடே சரியான களம் (தமிழ் நாட்டின் விழிப்பு)

“உலகத்து மனிதர்களெல்லோரும் ஒரே ஜாதி. ‘இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அநியாயமாக மடிகிறார்களே’ யென்பதை நினைத்து நான் கண்ணீர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன், அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்குச் சம்மதம் கிடையாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு” - ஆஹா, என்னே, மகாகவி பாரதியின் உலகநேய சிந்தனை!

பதிவிரதை

ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும்.  நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.

இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்

வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் 'ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது' என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.....