பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றி அருளினார். ஈசன் அடியார் எப்பிறப்பாயினராயினும் இணையானவரே என்பதை இந்நூல் உறுதிபடக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சமூக சமத்துவம் நாடிய அருளாளரான சேக்கிழார் பெருமானின் இந்நூல், அனைவரும் படித்தேற வேண்டியதாகும். இதில் இடம்பெற்றுள்ள ‘திருநாளைப்போவார் நாயனார் புராணம்’ (நந்தனார் சரிதம்) தற்காலத்தின் தேவை கருதி இங்கே பதிவாகிறது...